பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


யாக்கை மூத்துத் தளர்ந்தவர் இளமையை விரும்பின் அடைதல் இயலாது; தம் வாழ் நாளின் எல்லையை எவரும் அறியார் (314). நட்பின்கண் சிறுதவறும் நேராதபடி தடத்தல் வேண்டும் {315). தீயநெறி நரகம் போன்றது (329). இவை தமிழர் தம் உயர்ந்த கருத்துகள்.

பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் தோழியை நோக்கி, “இவ்வுலகத்தில் பிறந்தவர் இறப்பர் என்பது உண்மை . கணவன் பிரிவால் இறப்பு வந்ததே என்று நான் அஞ்சவில்லை . அவ்வாறு இறப்பின், இனிவரும் எனது பிறப்பு மக்கட் பிறப்பு இல்லாமல் வேறு ஒரு பிறப்பாக மாறிவிடின், என் காதலனை அப்பொழுது மறப்பேனோ என்று அஞ்சுகின்றேன் (397),” என்று உள்ளம் உருக உரைத்தாள். உயிர் பல பிறவிகள் எடுக்கும் என்ற நம்பிக்கை அக் காலத்தில் இருந்தது என்பதையும், உண்மை மனைவி பல பிறவிகளிலும் தன் கணவனையே பெற விரும்புவதையும் இத்தலைவியின் கூற்று உணர்த்துகின்றது அல்லவா?

மேற்கோள்

நற்றிணைப் பாடல்களில் திருக்குறள் கருத்துகளும் சொற்களும் சொற்றொடர்களும் ஆங்காங்கு அமைந் துள்ளன. அவற்றை நிரலே கீழே காண்க!

1.“நீரின் றமையா வுலகம் போலத்
தம்மின் றமையா நந்தயந் தருளி” 1

“நீரின் றமையா துலகெனின் யார்பார்க்கும்
வானின் நலமயா தொழுக்கு” -குறள் 20

2.“......................பெரியோர்
நாடி நட்பி னல்லது
நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே.” 32

“நாடாது நட்டலிற் கேடில்லை: நட்டபின்
வீடில்லல கட்பாள் புவர்க்கு” -குறள் 791