பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

பரிபாடல்களைப் பாடிய புலவர் இன்றுள்ள பிறதொகை நூற்பாக்களைப் பாடிய புலவரே எனக் கொள்ளினும், அப்புலவரின் வேறானவர் எனக் கொள்ளினும், அவர்கள் காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதி என்று கொள்வது தக்கதாகும். -

கலித்தொகையில்-நற்றிணை போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ள மூவேந்தர் போர்ச் செயல்களும் சிற்றரசர் போர்ச் செயல்களும் இவ்விரு தரத்தாரைப் பற்றிய பிற விவரங்களும் இடம் பெறவில்லை. பாண்டியர், அவர்தம் தலைநகராகிய கூடல், வையையாறு என்பவையே இடம் பெற்றுள்ளன. ஆதலால் கலித்தொகைப் பாக்கள் நக்கீரர், கபிலர், பரணர் போன்ற புலவர் பெருமக்களுக்குப் பின்பே பாடப்பெற்றனவாதல் வேண்டும் என்பது முன்பே கூறப்பட்டதன்றோ? பரிபாடலிலும் இதே நிலையை காணப்படுவதால், இதன் காலமும் கலித்தொகையின் காலமென்றே கூறுதல் பொருத்தமாகும்.

பரிபாடல் செய்திகள்

முப்பொருள் பற்றிய பாடல்கள்

பரிபாடல் நூலில் இருபத்திரண்டு பாடல்கள் உள்ளன.அவற்றுள் ஆறு (1-4, 13,15) திருமாலைப் பற்றியவை, எட்டுப் பாடல்கள் (5, 8, 9, 14, 17, 18, 19, 21) செவ்வேளைப் பற்றியவை; எட்டுப் பாடல்கள் (6, 7, 10, 11 12, 16, 20, 22) வையை ஆற்றைப் பற்றியவை. இவை அல்லாமல் தொல்காப்பிய உரையில் காணப்பட்ட மூன்று பாடல்கள் இந்நூலின் இறுதியில்: சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று திருமாலைப்பற்றியது: ஒன்று வையை பற்றியது; மற்றொன்று மதுரை பற்றியது.

உதிருமாலைப் பற்றிய 6 -யாக்களிலும் அகப்பொருள் பற்றிய செய்திகள் இல்லை; செவ்வேளைப்பற்றிய 8செய்யுட்களில் நான்கு (8, 9, 14, 21 அகப்பொருள் கலந்தவை. வையை பற்றிய எட்டுப் பாக்களில் ஆறு பாடல்கள் அகப்பொருள் கலந்தவை. இவ்வகப்பொருள் கலந்த பாடல்கள்