பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார் 361

5. அரசியல் அறிவுரை : மணிமேகலா தெய்வம், மணி மேகலைமீது காதல் கொண்ட உதயகுமரன் கனவில் தோன்றிக் கீழ்வருமாறு அறிவுரை கூறியது. அவ்வறிவுரை ஆட்சித் தலைவர்கள் உள்ளத்தில் இருத்தற்குரியது.

“கோல்நிலை திரிந்திடிற் கோள்நிலை திரியும்

கோள்நிலை திரிந்திடில் மாரிவறங் கூறும்

மாரிவறங் கூரின் மன்னுயிர் இல்லை

மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்

தன்னுயிர் என்னும் தகுதியின் றாகும்”.

 - காதை 7 வரி 8-12

இஃது எவ்வளவு சிறந்த அறிவுரை!

6. பசிப்பிணி என்னும் பாவி : தீவதிலகை என்னும் தெய்வ மகள் பசியின் கொடுமையைப்பற்றி மணிமேகலையிடம் கூறினமை பசிப்பிணியை நன்கு படம்பிடித்துக் காட்டுகின்றது. அதனைக் கீழே காண்க:

“குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும்

பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்

நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்

பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

பசிப்பிணி யென்னும் பாவி.”

 - காதை 11, வரி 76-80

7. உண்டி கொடுத்தோர் சிறப்பு: உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தவராவர் என்று காயசண்டிகை கூறுகின்றாள். அவள் கூறுவதைக் கீழே காண்க:

"ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர்

ஆற்றா மக்கள் அரும்பசி களைவோர்

மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை