பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

362

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே.”

-காதை, 11, வரி 92-93

8. தலயாத்திரை: மக்கள் தம் பாவத்தைப் போக்கத்தல யாத்திரை செய்து குமரித்துறையில் நீராடுதல் வழக்கம் (காதை 13, வரி-5-7).

இவ்வாறே வித்தியாதரர் தம் தீவினையைப் போக்கப் பொதியில் மலைக்கு வந்தனர் (காதை 17, வரி 22-24).

9. கணிகையர் இயல்பு: கணிகையர், பாணன் இறந்தவுடன் இறக்கும் தன்மையில்லாத யாழைப் போன்றவர்; மேலும் மணமுள்ள மகரந்தத்தை நுகர்ந்து தேன் இல்லாத பூவை விட்டு நீங்கும் வண்டினைப் போன்றவர்; மற்றும் நல்வினை நீங்கும் காலத்துத் திருமகளைப்போல் ஆடவரை விட்டு நீங்குபவர். இது மாதவியின் நாயாகிய சித்திராபதி கூறியுள்ள செய்தியாகும் (காதை 18, வரி 17-22).

10. கணிகையர்க்குத் தண்டனை: கணிகையருள் குடிக்குற்றப்பட்டாரை ஏழு செங்கல் சுமத்தி அரங்கினைச் சூழ்வித்துப் புறத்து விடுதல் மரபு (காதை 18, வரி 33-34).

11. அறம் செய்யக் காரணம்: மணிமேகலை தன்னைக் காதலித்துவந்த உதயகுமானை நோக்கித் தான் உயிர்களுக்கு அன்னம் படைக்கும் நல்லறத்தை மேற்கொண்டதற்குக் காரணம் கூறுகின்றாள். அதனை அவள் வாயாலேயே கேட்டு மகிழ்க:

“பிறத்தலும் மூத்தலும் பினிப்பட் டிரங்கலும்
இறத்தலு முடையது இடும்பைக் கொள்கலம்
மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து
மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்.”

-காதை 16, வரி 136-139