பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

366

தமிழ் மொழி—இலக்கிய வரலாறு

கிறது. நல்வினையில் சிறப்புப்பகுதி தானம் செய்தல். அத்தான வகைகளுள் உயர்ந்தது அன்னதானம்.

“இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வருக் தாரார்

மிக்க அறமே விழுத்துணை யாவது”
-காதை 22, வரி 135-138

தீவினை வலிமையுடையது என்பது இந்நூலில் பல இடங்களில் வற்புறுத்தப்பட்டுள்ளது.

“ஆங்கவன் தீவினை உறுத்த தாகலின்” 22-193.”

உதயகுமரன் விஞ்சையன் வாளால் வெட்டுண்டது, சென்ற பிறப்பில் அவன் செய்த தீவினையால் ஆகும் (23, 82-85).

“உம்மை வினைவந்து உறுத்தல் ஒழியாது.”

என்று கண்ணகித் தெய்வம், கோவலன் கொல்லப்பட்டமைக்கு, அவன் முற்பிறப்பில் செய்த தீவினையை மணிமேகலைக்கு எடுத்துக் காட்டியது (26. வரி 14-33).

வருணனை

மணிமேகலை என்னும் காவியம் பெளத்த சமயச் செய்திகளையே மிகுத்துக் கூறுவதாயினும், ஆங்காங்குச் சில வருணனைப் பகுதிகளையும் பெற்றிருத்தல் குறிப்பிடத்தக்கது. காவிரிப்பூம்பட்டினத்து உவவனம் எங்ஙனம் அமைந்திருந்தது என்பதைச் சாத்தனார் அழகுறக் கூறியுள்ளார். அவ்வுவவனத்தில் குரவம், மரவம், குருந்தம் கொன்றை, திலகம், வகுளம், வெட்சி, நரந்தம், நாகம், புன்னை, பிடவம், தளவம், குடசம், வெதிரம், அசோகம், செருந்தி, வேங்கை, சண்பகம் முதலிய மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. அவ்வனத்தின் தோற்றம், கைத்தொழிலில் பண்-