பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

51


தான் அவ்வாறு விளையாடவில்லை. என்று கூறுவாள். ஒழுக்கம் கெட்ட தலைவன் இவ்வாறு பொய்யாக ஆணை கூறுவது வழக்கம். இதனைப் பரிபாடலில் காணலாம்.

ஒரு தலைவன் பரத்தை வீட்டில் இருந்தபொழுது அவன் தலைவி பிள்ளை பெற்றாள்; வெண் கடுகை அப்பி எண்ணெய் தேய்த்து நீராடிக் குளித்து நெய்பூசி உறங்கினாள். தனக்கு மைந்தன் பிறந்தான் என்பதைக் கேள்வியுற்று மகிழ்ந்த தலைவன் இடையாமத்து இருளில் கள்வனைப் போல வீடுவந்து சேர்ந்தான் (நற்றிணை-40).

தொல்காப்பியர்க்கு முற்பட்ட தமிழரும், தொல்காப்பியர்க்குப் பிற்பட வாழ்ந்த சங்ககாலத் தமிழரும் காதல், வீரம் ஆகிய இரண்டையும் தம் இரு கண்களாகப் போற்றினர் என்பது தொல்காப்பியப் பொருளதிகாரத்தாலும் எட்டுத்தொகை நூல்களாலும் அறியக்கிடக்கின்றது. ஆதலின் அப்பெருமக்கள் இவ்விரண்டிற்கும் இலக்கணங்களை வகுத்தனர். அவை முறையே அகப்பொருள் இலக்கணம், புறப்பொருள் இலக்கணம் என்று பெயர் பெற்றன. இங்ஙனம் அகப்பொருளுக்கும் புறப்பொருளுக்கும் வேறு எம்மொழியிலும் இலக்கணம் வகுக்கப்படவில்லை என்பது இங்கு அறியத்தகும். தொல்காப்பியர் களவியல், கற்பியல், பொருளியல் என்னும் மூன்று இயல்களில் பல அசுப்பொருள் துறைகளை விளக்கியுள்ளார். அத்துறைகளுக்குரிய செய்திகளை ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை ஆகிய ஐந்து நூல்களிலும் காணலாம்.

புறப்பொருள் இலக்கணம்

தம்மாட்சி நிலவியுள்ள நாட்டிலே தான் மனிதனது: காதல் வாழ்க்கை சிறப்புறும். ஒரு நாடு தம்மாட்சி பெற்று விளங்கவேண்டுமாயின், அந்நாட்டு மக்களுள் பலர். மறவராயிருத்தல் வேண்டும்: அங்ஙனம் இருத்தற்கு அவர்க்குப் போர்ப் பயிற்சி இன்றியமையாதது. ஆதலின், பண்டைத்-