பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

நச்சினார்க்கினியர் காலம் ஏறத்தாழக் கி.பி. 14-ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாகும். அவர் திருமுருகாற்றுப்படை உரையில்,

"சோமன் வழிவந்த பாண்டியநின்

 நாட்டுடைத்து நல்ல தமிழ்"

என்னும் இரண்டு வரிகளை மேற்கோளாகக் காட்டியுள்ளார். எனவே, இவ்விரண்டு வரிகளும் அவர் காலத்துக்கும் முற்பட்ட ஒரு பழம் பாடலைச் சேர்ந்தது என்பது தெளிவாகும்.

இங்ஙனம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முதல் ஒவ்வொரு நூற்றாண்டிலும் வாழ்ந்து மறைந்த புலவர் பெருமக்கள் மதுரையில் தமிழ்ச் சங்கம் ஒன்று இருந்தது என்பதைத் தம் பாக்களில் குறித்துள்ளமை ஆழ்ந்து சிந்திக்கத்தகும். ‘மதுரையில் பாண்டியர் ஆதரவில் தமிழ்ச் சங்கம் ஒன்று நடைபெற்று வந்தது-அதன்கண் புலவர் பலர் கூடி முத்தமிழையும் ஆராய்ந்தனர்-நூல்கள் பல செய்தனர்-பிறர் பாடிய நூல்களை ஏற்றுக்கொண்டனர்,’ என்ற கருத்துத் திருநாவுக்கரசர் காலம் முதல் புலவர் பெருமக்களிடையே நிலவியிருந்தது என்பதை இதுகாறும் கூறப்பெற்ற சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன அல்லவா? இங்ஙனம் பின்னோரால் குறிக்கப்பெற்ற புலவர் பேரவை ஒன்று திருநாவுக்கரசருக்கு முன்பு தோன்றிய தொகை நூல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் காவியங்களிலும் குறிக்கப்பட்டுள்ளதா? என்பது இனி ஆராயத்தகும்.

அப்பர்க்கு முற்பட்ட சான்றுகள்
1. மதுரைக் காஞ்சியில்
(வரி 761-762)

"தொல்லாணை கல்லாசிரியர்
 புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்
 நிலந்தரு திருவின் நெடியோன்"

என வந்துள்ள அடிகள், ஆசிரியர் பலர் கூடியிருந்த பேரவையைக் குறிக்கும் என்பது தெளிவு. இது பற்றி மகா-