பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

சென்ற பொருள்களை அரேபியர் ஏடன் என்ற துறைமுகத் தில் பெற்று, ஆப்பிரிக்கருக்கு விற்றனர்.'

பிலிப்பைன்ஸ் தீவுகளின் வடபகுதியில் தென் இந்தியாவிற் கிடைத்த இரும்புக்காலப் பொருள்கள் கிடைத்துள்ள தைக் காண, அப்பண்டைக்காலத்திலேயே பிலிப்பைன்ஸ் தீவுகட்கும் தென் இந்தியாவுக்கும் இடையில் கடல் வாணிகம் நடைபெற்றதென்பது தெளிவாகும். அக்காலம் ஏறத்தாழக் கி. மு. முதல் ஆயிரம் என்னலாம்.

கி. மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பு பாபிலோன் நகரத்திற்குக் கடல் வழியாக அனுப்பப்பட்ட அரிசி, மயில், சக்தனம் முதலிய பொருள்களின் பெயர்கள் திராவிட மொழிப் பெயர்களாகவே காணப்பட்டமை, அப்பழைய காலத்தில் தமிழர் மேற்கொண்டிருந்த கடல் வாணிகச் சிறப்பை நன்கு உணர்த்துவதாகும்.”

கி. மு. 606 இல் அசிரியப் பேரரசு மறைந்தது. பாபி லோன் நகரம் வாணிகத்தில் சிறந்த நகரமாய் மாறியது. யவனர், யூதர், பொனீசியர், இந்தியர், சீனர் என்பவர் தங்கள் பொருள்களைக் கொண்டு சென்று அந்நகரத்தில் விற்கலாயினர். அந்நகரத்தில் தென்னிந்திய வணிகர் குடியேறி வாழலாயினர். அக்குடியேற்றம் கி. பி. 7 ஆம் நூற்றாண்டு வரையில் அந்நகரில் தொடர்ந்து இருந்து வந்தது. கி. மு. 538 இல் சைரஸ் என்ற பாரசீகப் பேரரசன் பாபிலோனிய பேரரசை வீழ்த்தினான். அவனுக்குப் பின்பு வந்த டேரியஸ் தரை வழி வாணிகத்தையும் கடல் வாணிகத் தையும் பெருக்கினான், அலெக்ஸாண்டரால் ஏற்படுத்தப் பட்ட அலெக்ஸாண்டிரியா நகரம் இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் நடைபெற்ற கடல் வாணிகத்தில் சிறந்த பங்கு

1. P. W. S. Ayyangar, History of the Tamils, pp

129–134.

2. K. A. N. Sastry, A History of india, pp: 76-78.