பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93


படையாகத் தொல்காப்பியர்க்கு முன்னரே மிகப்பல இலக்கி யங்களும் இலக்கண நூல்களும் தமிழ்மொழியில் நிலைபெற்று இருத்தல் வேண்டும் என்பது அறிவுடையோர்க்கு நன்கு புலனாகும். தொல்காப்பியர் தம் காலத்தனவும் தமக்கு முன்னர் எழுந்தனவும் ஆகிய இலக்கண இலக்கிய நூல்களை நன்கு ஆராய்ந்தே அவற்றின் இயல்புகள் அனைத்தும் விளங்கத் தம் நூலை இயற்றினார் என்பது தெளிவாகும்.

தொல்காப்பியச் சூத்திரங்களுள் ஏறத்தாழ இருநூற்று அறுபது இடங்களில் தொல்காப்பியர், தமக்கு முன்பு இருந்தவரும் தம் காலத்தவருமான இலக்கண ஆசிரியர் பலரைப் பலபடியாகக் குறிப்பிட்டுள்ளார்

(1) என்ப'- மொழிப' என்னும் முறைமை தொல்காப்பியத்தில் ஏறத்தாழ 147 இடங்களில் வந்துள்ளன.

(2) என்மனார் புலவர்' என்பது சுமார் 8.8 இடங்களில் வந்துள்ளது.

(3) வரையார்’ என்பது 15 இடங்களில் வந்துள்ளது. (4) பிற சிறப்புடன் வந்துள்ள தொடர்கள் ஏறத்தாழ முப்பதாகும். இத்தொடர்கள் தாம் சுவையுடையவை. ஆதலின்,

அவற்றை அதிகார முறைப்படி ஒன்றன்பின் ஒன்றாக இங்குக் காண்போம்:

1. எழுத்ததிகாரத்தில்1. நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே நூற்பா 7 2. ஒத்த தென்ப உணரு மோரே' ** 193. 3 செவ்வி தென்ப சிறந்திசி னோரே' ’’ 295 4. புகரின்று என்மனார் புலமை யோரே' ** 369

11. சொல்லதிகாரத்தில்1. உளவென மொழிப உணர்ந்திசி னோரே' 116 2 . வழுக்கின் றென்ப வயங்கி யோரே' ** 119 3. விளியொடு கொள்ப தெளியு மோரே' "" 153 4. ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே' ’’ 15 8.