பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. மத பேதங்களைக் குறித்து 9B 16. மத பேதங்களைக் குறித்து மத பேதங்களைக் குறித்து பாரதி மிகவும் சிறப்பான முறையில் தனது கட்டுரைகளில் எடுத்துக் கூறுகிறார். இதில் பாரத தேசம் முக்கியமாகத் தமிழ்நாடு இன்று புதிதாக அன்று நெடுங்காலமாகத் தலைமையொளி வீசி வருதல் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ராமானுஜர் தமிழ் நாட்டில் பிறந்தவர் அன்றோ? ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவதாரம் புரிந்தது தமிழ் நாட்டிலன்றோ? பறையனைக் கடவுளுக்கு நிகரான நாயனராக்கிக் கோயிலில் வைத்தது தமிழ் நாட்டிலன்றோ? சிதம்பரம் கோயிலுக்குள்ளே நடராஜருக்கு ஒரு சந்நிதி, பெருமாளுக்கு ஒரு சந்நிதி, ரீரங்கத்திலே பெருமாளுக்கு ஒரு துலுக்கப் பெண்ணை தேவியாக்கித் துலுக்க நாச்சியார் என்று பெயர் கூறி வணங்குகிறார்கள். “எம்மதமும் சம்மதம்”என்கிறார் ராமலிங்க ஸ்வாமி. “உலகத்தில் உள்ள மத பேதங்களையெல்லாம் வேருடன் களைந்து சர்வ ஸமய ஸ்மரசக் கொள்கையை நிலை நாட்ட வேண்டுமானால் அதற்குத் தமிழ் நாடே சரியான களம். உலகம் முழுவதும் மதவிரோதங்களில்லாமல் ஒரே தெய்வத்தைத் தொழுது உஜ்ஜீவிக்கும் படி செய்யவல்ல மஹான்கள் இப்போது தமிழ் நாட்டில் தோன்றியிருக்கிறார்கள். அது பற்றியே பூமண்டலத்தில் புதிய விழிப்பு தமிழகத்தில் தொடங்குமென்கிறோம்” என்று பாரதியார் எழுதுகிறார். இதில் சரளமான உரைநடையினைக் காண்கிறோம். பாரதி தனது கவிதைகளில் கூறுவதைப் போலவே தனது உரை நடையிலும் சில வலுவான கருத்துக்களை உறுதிப் படக் கூறுகிறார். அதிலுள்ள சொற்கள் கூர்மையானவை. சிந்தனையைத் தூண்டுபவை. நேரடியானவை. எடுத்துக் -காட்டாக,