பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 99 “இந்தக் காலத்தில் பல பொய்கள் இடறிப் போகின்றன. பல பழைய கொள்கைகள் தவிடு பொடியாகிச் சிதறுகின்றன. பல அநீதிகள் உடை படுகின்றன. பல அநியாயக்காரர்கள் படு பாதாளத்தில் விழுகிறார்கள். இந்தக் காலத்தில் யாருக்கும் பயந்து நாம் நமக்குத் தோன்றுகின்ற உண்மைகளை மறைக்கக் கூடாது. பத்திரிகைகள் தான் இப்போது உண்மையைச் சொல்ல சரியான கருவி. பத்திராதிபர்கள் இந்தக் காலத்தில் உண்மைக்குப் புகலிடமாக விளங்குகிறார்கள். நம்மைப் போன்றதொரு ஆத்மா நமக்கு அச்சத்தினாலே அடிமைப்பட்டிருக்கும் என்று நினைப்பவன் அரசனாயினும், குருவாயினும், புருஷனாயினும் மூடனைத் தவிர வேறில்லை. அவனுடைய நோக்கம் நிறை வேறாது. அச்சத்தினால் மனுஷ்ய ஆத்மா வெளிக்கு அடிமை போல நடித்தாலும் உள்ளே துரோகத்தை வைத்துக் கொண்டிருக்கும். “அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது.” என்று பாரதி தனது உரைநடையில் எழுதுகிறார்.