பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. கதை வடிவம் 102 நடக்கிறார்கள். சில முகமதிய ஸ்திரீகள் முட்டாக்கு போட்டு தலையையும் முகத்தையும் மூடிக் கொண்டு திசைக் -கொருத்தியாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுருட்டு, பிடி, பொடிப்பட்டை, முறுக்கு, தேங்குழல், சுசியன், காப்பி முதலியன வியாபாரம் செய்யும் ஓரிரண்டு பிராமணரும் சூத்திரரும் பகற் கொள்ளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதாவது காசு பெறாத சாமான்களுக்கு மும்மடங்கு நான்மடங்கு விலை வைத்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள்” என்று பாரதி எழுதுகிறார். நல்ல அற்புதமான வேடிக்கையான, சிறப்புமிக்க வர்ணனையான உரைநடை. யாரும் சுலபமாகப் படித்துப் புரிந்து கொள்ளும் படியான எளிய நடையிலான உரைநடை. கதை வர்ணனையில் பாரதி மிகவும் நுட்பமாக, இலை மறைவு காயாக, பல அரசியல், அன்னிய ஆட்சி, சமூக சீர்திருத்தம், மூடப் பழக்க வழக்கங்கள், வியாபாரக் கொள்ளை, இயற்கைக் காட்சி, சிறந்த இயற்கை வர்ணனை முதலிய வற்றை மிகவும் சாதாரணமான சரளமான எளிய நடையில் பாரதியாரின் உரைநடை மிகவும் சிறப்பாகவும் முன்னுதாரணமாகவும் அமைந்திருக்கிறது. பாரதியாருடைய அனுபவ ஞானம் இதில் பளிச்சிடுகிறது.