பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. நிறைவுரை 142 -வைகளாகவும் தெளிவான புதிய தமிழ் நடை கொண்டதாகவும் இருப்பதைக் காணலாம். பாரதியாருடைய உரைநடை மொழி பண்டைய மரபில் வேர் ஊன்றி எழுந்து துளிர் விட்டு புதுமை பெற்று வளர்ந்திருக்கிறது. மறுமலர்ச்சி பெற்று இதழ் விரித்து மணம் வீசுகிறது. பாரதியின் உரைநடை மொழி நவீன தமிழ் உரைநடைக்கு முன்னோடியாக அமைந்துள்ளது என்று கூறலாம். தமிழ் உரைநடை மொழிக்கு பாரதியின் உரைநடை மொழி ஒரு புதிய சகாப்தத்தைத் தொடக்கி வைத்திருக்கிறது எனக் கூறலாம். பாரதி தொடக்கி வைத்த தமிழ் உரைநடை மொழி அவர் வழியில் ஒரு புதிய மரபை உருவாக்கி அது வளர்ந்து வந்திருக்கிறது. பாரதியின் உரைநடை மொழி மக்கள் பேசிய மொழியைப் பிரதி பலித்திருக்கிறது. பாரதியின் உரைநடை மொழியில் அக்காலத்தில் கற்றோரிடம் பழக்கத்தில் இருந்த வடமொழி (சமஸ்கிருதம்) சொற்களும், வடமொழி மற்றும், பாலி, பிராகிருதம், மொழிகள் சார்ந்த எழுத்துகளும் சொற்களும் காணப்படுகின்றன. அவைகளும் காலத்தால் மாறி வந்திருக்கின்றன. தலைப்புகளுக்கேற்றவாறு மொழி நடையும் இருப்பதைக் காணலாம். பத்திரிகைகளின் வளர்ச்சி அச்சு எந்திரங்களின் வளர்ச்சி, தகவல் தொடர்பு சாதனங்கள், தகவல் தொழில் நுட்பம், மக்கள் தொடர்பு சாதனங்கள், கணிணி மற்றும் சமுதாயத்தின் உற்பத்தி சாதனங்கள், உற்பத்திக் கருவிகள், மனிதவளம், போக்குவரத்து, சாதனங்கள், நிர்வாக வளர்ச்சி, பல துறைக்கல்வி வளர்ச்சி, பன்னாட்டுத் தொடர்பு, இதர மொழிகளுடன் உள்ள தொடர்பு