பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 வளர்ச்சியில் பாரதியின்-உரைநடை-அ-சீனிவாசன் فسه ففع 3. எழுத்தும் சொல்லும் மனிதனுடைய வாயொலிகளிலிருந்து, அவனுடைய உச்சரிப்பிலிருந்து எழுத்துகளும் அவ்வெழுத்துகளின் சேர்மானங்களிலிருந்து சொற்களும், அந்த சொற்களுக்குப் பொருளும் கருத்தும், கருத்தமைவுகளும் கருத்து வடிவங்களும் உண்டாயிருக்கின்றன. சொற்களும் சொற்றொடர்களும் ஒவ்வொரு மொழியிலும் உயிர்த்துடிப்பானவை. சிறந்த கவிஞனின் கவிதைகளும், மற்றும் காவியங்களும் காப்பியங்களும் நூல்களும் எழுத்தாளர்களின் படைப்புகளும் அத்தகைய உயிர்த்துடிப்பை வெளிப்படுத்துகின்றன. ஒருமொழியின் வளம் அதன் சொற்களின் எண்ணிக்கையிலும், அச்சொற்களின் பொருளிலும், அப்பொருளின் ஆழத்திலும் விரிவிலும் அடங்கியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட எந்தக் அம்மொழி ஒரு வலுவான வளமான மொழியாகும் என்று கூறலாம். காலத்தால், இடத்தால், மனிதகுல வரலாற்றில், உற்பத்தி சக்திகளின், மனித வளத்தின், மனித நாகரிகத்தின், பொருள் செல்வத்தின் மற்றும் அறிவுச் செல்வத்தின் வளர்ச்சியையும் பெருக்கத்தையும் ஒட்டி மொழிகளின் சொற்களும் அவற்றின் பொருளும் விரிவுபட்டு வளர்ந்திருக்கிறது. எனவே மொழியின் வளர்ச்சிக்குச் சொல்வளம் பெருகிக் கொண்டேயிருக்க வேண்டும். அவ்வாறு தமிழ் மொழியின் சொல்வளம் மத்திய காலம்வரை பெருகிக் கொண்டே வந்து செழுமை பெற்றிருக்கிறது. கம்பராமாயணம், காப்பியங்கள், திருக்குறள், சைவ, வைணவ பக்தி இலக்கியங்கள், முதலியன தமிழ் மொழியின் சொல்வளத்தை மிகப் பெரிய அளவில் பெருக்கியிருக்கின்றன.