பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் ★ ★ 女

★ 39 மானம் நோக்கின் கவரிமா அனைய நீரார் காலனும் இடனும் ஏற்ற கருவியும் தெரியக் கற்ற நூல் உற நோக்கித் தெய்வம் நுனித்து அறம் குனித்த மேலோர் - சீலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் தெளிந்து கொண்டு பால்வரும் உறுதியும் தலைவற்குப் பயக்கும் நீரார். தம் உயிர்க்கு உறுதி எண்ணார் தலைமகன் வெகுண்ட போதும் H வெம்மையைத் தாங்கி நீதி விடாது நின்று உரைக்கும் வீரர் செம்மையின் திறம் பல் செல்லாத் தேற்றத்தார் தெரியும் காலம் மும்மையும் உணர வல்லார் ஒருமையே மொழியும் நீரார் நல்லவும் தீயவும் நாடி நாயகற்கு எல்லையின் மருத்துவன் இயல்பின் எண்ணுவார் ஒல்லை வந்து உறுவன உற்ற பெற்றியின் தொல்லை நல் வினையென உதவும் சூழ்ச்சியார் என்று கம்பர் பல சொற்களில் அமைச்சர்களின் தகுதி திறமை பற்றிக்குறிப்பிடுகிறார். வள்ளுவப் பேராசான் அருளிய திருக்குறள், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் தமிழ் மொழிச் சொற்களின் பெருக்கத்திற்கும் தமிழின் பெருமையை உயர்த்தவும் பெரிய அளவில் தனது பங்கைச் செலுத்தியிருக்கிறது என்பதை நன்கு அறிவோம்.