பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

284

(அம் முதல் முப்பேர்) (186) " அத்தன் என்பதுவே சிவனும் பிதாவும்

சுவாமியும் என்றே சொல்லு முப் பேரே...' அத்தன் என்னும் சொல்லுக்குச் சிவன், பிதா, சுவாமி என்று மூன்று பொருளாம். இப்படியாக இன்னும் அம் முதல் காற்பேர்’, ‘அம்முதல் ஐம்பேர் என மேலும் மேலும் அடுக்கி 'அம் முதல் காற்பத்தாறு பெயர் வரையும் ஆசிரியர் கூறிச் சென்றுளார். அரி' என்னும் சொல்லுக்கு நாற்பத்தாறு பொருள்கள் உள்ளனவாம். அது பற்றிய பா வருமாறு :

(அம் முதல் காற்பத்தாறு பெயர்) " அரியே: அரித்தலும், அருக்கனும், முராரியும்,

பரியும், சிங்கமும், பகையும், தேரையும், பொன்னும், காற்றும், பொன்னகர்க் கிறையும்,

செந்நெற் கதிரும், கிள்ளையும், காந்தியும், தேரும், ஐம்மையும், சேகும், வரியும்,

கூர்மையும், நிறமும், கூற்றும், வண்டும், வேயும், பன்றியும், விசியும், புகையும்,

பாயலும், சிலம்பின் பாலும், சோலையும், கண்ணினில் வரியும், கடலும், உரகமும்,

எண்ணிய திகிரியும், ஈர வாளும், தகரும், வலியும், அரிசியும், குரங்கும்,

புகரும், நெருப்பும், புரையும், சயனமும், எறிதரு பறையும், எண்படைக் கலமும்,

குறிதரு பச்சையும், கூறிய மதுவும், அரிதலும், எனப்பெயர் நாற்பத் தாறே.”

இது காறும் 'அ' என்னும் எழுத்தில் தொடங்கும் சொற்கள் சில பற்றிய நூற்பாக்கள் காட்டப்பட்டன. இவ்வாறே ம ற் ற எழுத்துக்களில் தொடங்கும் சொற்களை அகராதி நிகண்டிற் காண்க