பக்கம்:தமிழ் அங்காடி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110  தமிழ் அங்காடி


கொன்று அறம் காக்க வந்த நாம், ஓர் அரக்கனையே துணையாகக் கொள்ளின், அரக்கர் உதவியின்றி நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. நமக்குப் போதிய வலிமை இல்லை என்று உலகம் நம்மைக் குறைவாக எண்ணாதா?

"அரக்கரை ஆசுஅறக் கொன்று கல் அறம்
புரக்க வந்தனம் எனும் பெருமை பூண்டநாம்
இரக்கமில் அவரையே துணைக் கொண்டோம் எனின்
சுருக்கம் உண்டு அவர் வலிக்கு என்று தோன்றுமால்"
(67)

ஆசு அற=முழுதும் அழிய,சுருக்கம்=குறைவு-தாழ்வு. வீடணன் வஞ்சனையோடு வந்துள்ளான்; அவனை ஏற்க வேண்டா எனச் சுக்கிரீவன் சொல்லினான். சுக்கிரீவன் சொன்னதாக ஆசிரியர் கூறியுள்ள ஒவ்வொரு கருத்தும் பொருத்தமானது எனச் சுவைக்கத் தக்கதும் நயமானது மாகும்.

பின்னர் இராமன் சாம்பவனை நோக்கி உனது கருத்து யாது என வினவ, அவன் கூறலானான்:

அடைக்கலப் பொருள்

ஐயனே! அரக்கரின் இயல்பு தெரிந்ததே. அவர்களால் நன்மை கிடைப்பதுபோல் தோன்றினும் அரக்கராகிய சிற்றினத்தவரோடு சேர்தல் நன்றன்று. இப்போது வீடணனுக்கு அடைக்கலம் தந்து ஏற்றுக் கொணடபின், அவன் நமக்குத் தீங்கு தேடுவானாயின், பிறகு அடைக்கலப் பொருளாகிய அவனைக் கைவிட முடியுமோ? கைவிடின் நெடும்பழி சேரும். அறமும் ஆகாது அது;

"கைப் புகுந்துறு சரண் அருளிக் காத்துமேல்,
பொய்க்கொடு வஞ்சனை புணர்ந்த போதினும்
மெய்க் கொள விளியினும், விடுதும் என்னினும் திக்குறும் நெடும்பழி அறமும் சீறுமால்" (74)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/112&oldid=1203482" இலிருந்து மீள்விக்கப்பட்டது