பக்கம்:தமிழ் அங்காடி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  115


வந்தான் என்பதைத் 'தெள்ளிதின்’ என்பது புலப்படுத்துகிறது.

மற்றும், அரக்கரின் வஞ்சகச் செயல்களை அரக்கரே அறிவர். எனவே, எதிர்காலத்தில் அவர்கள் செய்யக்கூடிய வஞ்சகச் செயல்களை வீடணன் உணர்த்தக்கூடும் என்கிறான் (பாம்பு அறியும் பாம்பின் கால் அல்லவா? (93)

நான் இலங்கை சென்றிருந்தபோது என்னைக் கொல்ல இராவணன் முயல, தூதரைக் கொல்லலாகாது என்று தடுத்தான் வீடணன். (பாடல் - 95)

நான் இலங்கையில் மறைமுகமாக வீடணனின் மாளிகைக்குச் சென்றபோதுநல்ல நிமித்தங்கள் தோன்றின. அவன் மாளிகை அந்தணர் வீடுபோல் மங்கலமாக இருந்தது. (97, 98) சீதைக்கு வீடணன் மகள் திரிசடையே காவலாயிருந்தாள் (99)

மிக்க வலிமை உடைய நாம், அடைக்கலம் என வந்தவன் மேல் ஐயப்பாடு கொள்ளுவது, கடல் கிணற்று நீரைப்பார்த்து இந்தக் கிணற்று நீர் தன்னைக் கொண்டு போய் விடுமோ என ஐயுறல் போன்றதாம்.

"ஆவத்தின் வந்து அபயம் என்றானை
அயிர்த்து அகல விடுதும் என்றால்,
கூவத்தின் சிறுபுணலைக் கடல் அயிர்த்தது
ஒவ்வாதோ கொற்ற வேந்தே!" (101)

ஆவத்து = ஆபத்து. கூவம் = கிணறு. அயிர்த்தல் - ஐயுறல்.

பொருத்தமான - சுவையான உவமை, கிணற்று நீரை வெள்ளமா கொண்டுபோய் விடும்? என வினவுவர். இங்கே அதற்கு எதிர்மாறாக, கடல்நீரைக் கிணற்று நீரா கொண்டு போய் விடும்? என வினவுவது சுவையானது தானே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/117&oldid=1203490" இலிருந்து மீள்விக்கப்பட்டது