பக்கம்:தமிழ் அங்காடி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  143


கொள்ளுதல். இரந்து கொடல் = கெஞ்சி யாசித்துக் கொள்ளுதல். முதல் இரண்டு வழிகளும் பண்டைக் காலத்திலிருந்து நடப்பனவே யாகும். ஆனால் இப்போது நாம் வருணனை இரந்து பெறுதலினும் அறம் இல்லாவிடினும் கரந்து கோடலே பொருத்தமெனத் தோன்றுகிறது.

சாமம், தானம், பேதம், தண்டம் என்னும் நான்கு வகை வழிகளுள் இப்போது தண்டமே சிறந்ததாகத் தெரிகிறது இராமனுக்கு. அதாவது நேரடி நடவடிக்கையில் இறங்கித் தேவையை நிறைவேற்றத் தொடங்கிவிட்டான் இராமன்.

மானுடச் சிறுமை

கடலின் பெருமையையும் காட்டிலே காய் கனி தின்ற எனது மானுடத் தன்மையையும் எண்ணி வருணன் வரவில்லை போலும். இன்னும் சிறிது நேரத்தில் எனது நிலையைத் தேவரும் காண்பர்:

“கானிடைப் புகுந்து இருங்கனி
காயொடு நுகர்ந்த
ஊனுடைப் பொறை உடம்பினன்
என்று கொண்டு உணர்ந்த
மீனுடைக் கடல் பெருமையும்
வில்லொடு நின்ற
மானுடச் சிறு தன்மையும்
காண்பரால் வானோர்" (12)

காய்கனி தின்பவனுக்குப் போதிய வலிமை இராது; கடல் மிகவும் வலிமை உடையது - என்று தன்னை எளிமையாக வருணன் நினைப்பதாக இராமன் எண்ணுகிறான்.

உலகியல் செய்தி ஒன்று நினைவிற்கு வருகிறது. ஒரு காலத்தில் இந்தியக் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் வெள்ளையர் நாடொன்றில் சென்று விளையாடித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/145&oldid=1204209" இலிருந்து மீள்விக்கப்பட்டது