பக்கம்:தமிழ் அங்காடி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164  தமிழ் அங்காடி


  • 'திருமுருகு’ என்பதைத் தெரிய எழுதின்

ஐந்துயிர் மெய்யால் அமையும் தமிழில்.
ஆங்கிலம் பதினோ ரெழுத்திலே அமையும்
பிரெஞ்சு பதினான் கெழுத்து பெறுமால்.

சொல் வளம்

ஒருபொருள் குறிக்கும் பலசொல் வளமும்
பெரும்புகழ்த் தமிழில் பெருகி யுளதே.
ஒவ்வொரு பொருளையும் உணர்த்த நிகண்டில்
பத்தும் இருபதும் முப்பதும் மேலும்
பல்பெயர் இருப்பதைப் பரக்கக் காணலாம்.
இந்திய மொழிகட் கெழுத்து வளமதைத்
தந்த முதன்மொழி தமிழ்மொழி என்றே,
உலக மொழிகட் குயிராம் வேர்ச்சொல்
பலவும் அளித்தது பைந்தமிழ் என்றே,
உலக அறிஞர் ஆய்ந்துரைத் துள்ளனர்.
எனவே,
எழுத்து வளமும் இனியசொல் வளமும்
வழுத்து தமிழின் வளவிய மகுடமால்!

படைப்பு வளம்

ஆயிரம் ஆயிரம் ஆண்டு முன்பே
எம்மொழி யும்பெறா அகப்பொருள் இலக்கணம்
செம்மொழி தமிழில் செறிந்துள துணர்த்தும்
‘தொல்காப் பியநூல் தோலா மகுடமால்!
தனது நயத்தால் தமிழை உலகுக்கு
நனியறி முகஞ்செய் நன்மறை 'திருக்குறள்’
தலைமைத் தமிழ்க்கு நிலையாம் மகுடமால்!


_____________________________________________________________________________

  • திருமுருகு: தமிழில் ஐந்து எழுத்துக்கள்.

Thirumuruku:ஆங்கிலத்தில் பதினொன்று.
Tiroumouroukou: பிரெஞ்சில் பதினான்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/166&oldid=1210510" இலிருந்து மீள்விக்கப்பட்டது