பக்கம்:தமிழ் அங்காடி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210  தமிழ் அங்காடி


அற்ற தொழில் என்று கூறியிருப்பது நுணுகி நோக்குதற் குரியது. இது குறித்தே,

"செய்யுங் தொழிலைச் சீர்தூக்கிப் பார்க்கின்
நெய்யும் தொழிற்கு நிகரில்லை”

என்னும் மூதுரை முளைத்தது போலும்!

‘ராபர்ட் புரூக்' என்னும் ஆங்கிலக்கவி, “உலகமக்கள் துன்பம் என்னும் நீளப்பாவு நூலில், இன்பம் என்னும் குறுக்கு நூலைக் கோத்துவாங்கி, வாழ்க்கை என்னும் நெசவு செய்கிறார்கள்" என்று எழுதியிருப்பதையும் நோக்கின், 'சர்வம் நெசவு மயம் சகத்’ எனத் தோன்ற வில்லையா?

நூலின் பொருள்

இனி, இறைவனால் எழுதப் பட்டதாகச் சொல்லப்படும் ‘இறையனார் அகப்பொருள்’ என்னும் பழைய நூலின் உரையில், “இனி நூல் என்ற சொற்கும் பொருள் உரைக்கப்படும்; நூல் போறலின் நூல் என்ப, பாவை போல்வாளைப் பாவை என்றாற்போல. நூல் போல்தல் என்பது, நுண்ணிய பலவாய பஞ்சு துணிகளால், கைவல் மகடூஉ தனது செய்கை மாண்பினால் ஓர் இழைப்படுத்தலாம் உலகத்து நூற்நூற்றல் என்பது. அவ்வாறே பரந்த சொல்பரவைகளால் பெரும் புலவன்... யாப்பு நடைபடக் கோத்தலாயிற்று நூல் செய்தலாவது; அவ்வகை நூற்கப் படுதலின் நூல் எனப் பட்டது" என்று கூறியிருப்பது, முற்கூறிய நன்னூலோடு ஒப்புநோக்கற்குரியதல்லவா?(கைவல் மகடூஉ =கைத்தொழில் வல்ல பெண். செய்கை மாண்பு = நூற்புத்திறமை.)

இந்தியர் திறன்

இப்பகுதிகளால், மெல்லிதாக நூல் நூற்று நெய்த இந்தியர் திறமை புலப்படுகிற தன்றோ? இரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/212&oldid=1204363" இலிருந்து மீள்விக்கப்பட்டது