பக்கம்:தமிழ் அங்காடி.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  221


உமையும் குவளையும்

குவளைக் கண்ணி: தாமரை திருமாலின் கண்ணுக்குச் சிறப்பான உவமையாகக் கூறப்பட்டிருப்பது போலவே, குவளை சிவன் மனைவியாகிய உமாதேவியின் கண்ணுக்குச் சிறந்த உவமையாகக் கூறப்பட்டுள்ளது. சில இலக்கிய அகச்சான்றுகள் வருமாறு:

திருவாசகம் - திருவண்டப் பகுதி

குவளைக் கண்ணி கூறன் காண்க”. (2)

(குவளை மலர் போன்ற கண்ணையுடைய உமாதேவியை இடப்பாகத்திலே உடைய சிவன்)

திருவாசகம் - பிரார்த்தனைப் பத்து

காவி சேரும் கயற்கண்ணாள் பங்கா(32-5)

(மலர்ச்சியாலும் நிறத்தாலும் காவி (குவளை) மலரையும் வடிவ அமைப்பாலும் பிறழ்வினாலும் கயலையும் ஒத்த கண்ணையுடைய தேவியை ஒரு பாகத்தில் உடைய சிவனே. இஃது இருபொருள் உவமையாகும்)

திருவாசகம் - திருவெம்பாவை - 13

“பைங்குவளைக் கார் மலரால்” என்று தொடங்கும் (13 ஆம்) பாடலில், தேவியின் கண்கள் குவளை மலர்களாக உவமிக்கப்பட்டுள்ளன.

குமரகுருபரரின்

சிவகாமியம்மை இரட்டை மணிமாலை

"நங்காய் திருத்தில்லை நன்னுதலாய்
நுதல்நாட்டம் ஒத்து உன்

செங்காவி யங்கண் சிவப்ப தென்னே’ (14)

(உமாதேவியே! உன் கணவர் சிவன் கங்காதேவியைத் தம் தலையில் வைத்திருப்பதால் கருங்குவளை போன்ற உன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/223&oldid=1209704" இலிருந்து மீள்விக்கப்பட்டது