பக்கம்:தமிழ் அங்காடி.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  271


எல்லாரையும் விட உன்மேல்தான் மிகுந்த காதல் உடையேன் எனக் கணவன் மனைவியிடம் கூறினான். 'எல்லாரையும் விட' என்றால், அந்த எல்லாரும் எனப் பட்டவர் யார்யார் என்று கேட்டு அவள் ஊடல் கொண்டாளாம்.

“யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று”

என்பது குறள். யாரினும் என்பதை யார் இ(ன்)னும் எனவும் பிரிக்கலாம்.

இந்தப் பிறப்பில் உன்னைவிட்டுப் பிரியேன் என்று கணவன் கூறினான். அங்ஙனமெனில், அடுத்த பிறவியில் பிரிந்துவிடுவீர்களா? என்று கேட்டுக் கண்ணிர் மல்க அழுதாளாம் மனைவி.

"இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்"

என்பது குறள். காலையில் திருமணம் - மாலையில் மறுமணம் - என்னும் நாகரிகக்காரருக்குக் கொடுக்கும் சவுக்கடி - சம்மட்டி அடியாகும் இந்தக் குறள்.

ஒருவன் தன் மனைவியை நோக்கி, நான் வெளிநாடு சென்று வருகிறேன் - நீ வருந்தாதே என்றான். அதற்கு அவள், இந்தப் பொல்லாத உலகில் நான் எவ்வாறு தனியாய் இருப்பேன் என்று நொந்து உரைத்தாள். அதற்கு அவன், நான் மிகவும் விரைவில் வந்து விடுவேன் என்றான். அதற்கு அவள், நீங்கள் செல்லவில்லை என்றால் என்னிடம் ஏதாவது கலந்து உரையாடுங்கள் - செல்வதுண்டேல், விரைவில் வரும் வரையும் உயிரோடு இருக்கக் கூடியவர்களிடம் உங்கள் விரைந்த வருகையை உரையுங்கள் என்றாள். இது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/273&oldid=1204488" இலிருந்து மீள்விக்கப்பட்டது