பக்கம்:தமிழ் அங்காடி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54  தமிழ் அங்காடி


இந்த அடிப்படையில்தான் அரக்கி கூறி ஏமாற்ற முயல்கிறாள்.

அரக்கியின் பொய்ம்மை நிலை ஒரு புறம் கிடப்பதாகுக. இந்தக் காலத்தில் மாப்பிள்ளைக் கழுகுகட்குப் பணத்தீனி போட முடியாமையால், எத்தனையோ அழகிய குல மகளிர், முப்பது முப்பத்தைந்து அகவை வரையிலுங்கூட தாலி வராமல் குடும்பத்துடன் மக்கி மடிந்து கிடப்பது எவ்வளவு கொடுமை! இதற்கு மாற்றுத் தீர்வு என்ன?

உரையாடல்

இராமன்: நீ அந்தணர் குலம்; யான் அரசர் குலம்; அதனால் யான் உன்னை மணத்தல் தகாது.

அரக்கி: யான் அந்தணனுக்கு அரக்கி வயிற்றில் பிறந்ததனால் யான் அந்தணர் குலத்தவள் அல்லள்.

இராமன்: அங்ஙனம் எனில், யான் மக்கள் குலத்தவன்; நீ அரக்கர் குலத்தவள்; மக்களும் அரக்கரும் மணக்க இயலாது.

அரக்கி: யான் தவம் செய்து அரக்க உருவை மாற்றி மக்கள் குலத்தவளாகி விட்டேன்.

இராமன்: சரி, உன் அண்ணன் மார்களாகிய குபேரனும் இராவணனும் வந்து உன்னை எனக்கு மணம் முடித்து வைக்கவேண்டும்.

அரக்கி: களவு மணம் (காந்தருவ விவாகம்) என ஒன்று உள்ளதே. அதன்படி எவரும் அறியாமல் நாம் உறவு கொள்ளலாம். இவ்வாறு நாம் உறவு கொண்டபின் என்னைச் சேர்ந்தவர்கள், மண்ணுலகோடு விண்ணுலகிற்கும் உன்னை அரசனாக்கி உனக்கு ஏவல் செய்வர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/56&oldid=1202371" இலிருந்து மீள்விக்கப்பட்டது