பக்கம்:தமிழ் அங்காடி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62  தமிழ் அங்காடி


எடுத்து அவரது நாக்கில் தடவினார்கள். ஆவி ஒயினும் ஆசை ஓயாததற்கு எடுத்துக்காட்டாய் இந்த நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டது இங்கே.

அன்றிரவு கழிந்தது. அரக்கராம் இருளைப் போக்க இராமன் தோன்றியதுபோல் உலகின் புற இருளைப் போக்க ஞாயிறு தோன்றினான்.

இராமன் இலக்குவனைக் காவலுக்கு விட்டுத் தான் காலைக் கடன்களை முடிக்க நீர்க் கரைக்குச் சென்றான்.

அப்போது அரக்கி, சீதையை மறைத்து விட்டுத் தான் சீதையின் உருக்கொள்ள எண்ணிச் சீதையைப் பற்றப் போனாள். இதை இலக்குவன் பார்த்து விட்டான்.

உறுப்பு அறுப்பு

இலக்குவன் பாய்ந்து அரக்கியின் கூந்தலை இடக் கையால் பற்றிக் கொண்டு, வாளை எடுத்து அவளுடைய முககு, காதுகள், முலைக் கண்கள் ஆகியவற்றை அறுத்து எறிந்த பின் தலை மயிரைப் பிடியினின்றும் விட்டான்:

            'நில்லடீஇ எனக் கடுகினன் பெண்ணென கினைந்தான்
            வில் எடாது அவள் வயங்கு எரியாம் என விரிந்த
            சில்வல் ஒதியைச் செங்கையில் திருகுறப் பற்றி
            ஒல்லை ஈர்த்து உதைத்து ஒளிகிளர் சுற்றுவாள் உருவி’ (93)


             “ஊக்கித் தாங்கி விண்படர் வென்
                 என்று உருத்து எழுவாளை
             நூக்கி நொய்தினின் வெய்து
                 இழையேல் என நுவலா
             மூக்கும் காதும்வெம் முரண்
                 முலைக் கண்களும் முறையால்
             போக்கிப் போக்கிய சினத்தொடும்
                 புரிகுழல் விட்டான்" (94)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/64&oldid=1202330" இலிருந்து மீள்விக்கப்பட்டது