பக்கம்:தமிழ் அங்காடி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90  தமிழ் அங்காடி



        "கற்றுறு மாட்சி என்கண் இன்றாயினும்
        முற்றுறு பொருள் தெரிந்து உணர்தல் ஒயினும்
        சொற்றுறு சூழ்ச்சியின் துணிவு சோரினும்
        முற்றுறக் கேட்டபின் முனிதி மொய்ம்பினோய்" (74)

இராவணனை எதிர்த்துப் பேசின் அவன் முனிவான் என்பது வீடணனுக்கு முன்கூட்டித் தெரியு மாதலின் - அதாவது அவன் சினப்பது உறுதி என்பதை அறிவான் ஆதலின், முற்றுறக் கேட்டபின் முனிதி என்றான். உலகியலிலும், "நீங்கள் அவசரப்பட்டு என்மேல் வருத்தப்படுவதில் பயனில்லை - நான் சொல்வதை முழுதும் கேட்ட பின் பிறகு ஒரு முடிவுக்கு வரலாம்" - என்று மக்கள் உரையாடிக் கொள்ளும் முறை ஈண்டும் இடம் பெற்றுள்ளது.

மொய்ம்பினோய் (ஆற்றல் மிக்கவனே) என்று தமையனை உயர்த்திக் குறிப்பிட்டு வீடணன் சொல்லத் தொடங்கியதும் ஒருவகைத் திறமையாகும்.

பெண்ணாசை

மேலும் வீடணன் கூறுகிறான். அண்ணா! எண்ணிப் பார்க்கின், அரசர்கட்கு உயர்வோ அல்லது தாழ்வோ வருவது பெண் காரணமாகத்தான். வேறொரு காரணம் உண்டெனின், அது மண்காரணமாம்:

        "எண்பொருட்டு ஒன்றிகின்று எவரும் எண்ணினால்
        விண்பொருட்டு ஒன்றிய உயர்வும் மீட்சியும்
        பெண்பொருட்டு அன்றியும் பிறிது உண்டாமெனின்
        மண்பொருட் டன்றியும் வரவும் வல்லவோ (76)

எண்பொருட்டு = ஆராய்வதற்கு. விண் பொருட்டு ஒன்றிய உயர்வு = வானளாவிய பெருமை. மீட்சி = பெருமை குறைந்து போன சிறுமை-தோல்வி-அதாவதுமுன்னால் பெற்றிருந்த பெருமை குறைந்து திரும்பவும் (மீட்சி) சிறுமை மீள்வது. இராவணன் பலரை வென்றதால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/92&oldid=1202432" இலிருந்து மீள்விக்கப்பட்டது