பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
26

 துறைகளில் புகுந்ததினால்தான் வடமொழிகள், சுலபமாகவும். அதிக மாகவும் தமிழுட்கலந்தன என்று கூறலாம்.

முதன்முதல் தென்னாட்டிற் குடியேறிய ஆரியர்கள், ரிஷிகள் ஆசாரியர்கள், புரோகிதர்கள், சோதிடர்கள் முதலியோர் என்று எண்ணப்படுகிறது. அவர்களிற் பெரும்பாலார், ஆரிய மதத்துடன், தென்னாட்டில் வழங்கிய சிவ ஆராதனம், லிங்க ஆராதனம், முருகவேள் ஆராதனம், கிராம தேவதைகளாகிய காளி முதலியவைகளின் ஆராதனம், முதலியவற்றை மிகவும் சாதுர்யமாய்ச் சேர்த்து, தற்காலத்தில் ஹிந்துமதம் என்று வழங்குவதை இந்நாட்டில் ஸ்தாபித்தனர் என்று பூர்வீக சாஸ்திரஞர்களால் எண்ணப்படுகிறது. ஆரியராகிய குருமுனி எனப்பட்ட அகஸ்தியர், தமிழ் நாட்டிற்கு வந்து இலக்கணம், ஜோதிஷம், வைத்தியம் முதலிய நூல்கள் ஸ்தாபித்தார் என்று கூறுவது இதை ஒருவாறு ஸ்திரப்படுத்துகிறது. ஆரிய மதமானது தமிழ் நாடெங்கும் பரவவே, ஆரியச் சொற்களும் பரவ ஆரம்பித்தன. அவற்றுள் மத சம்பந்தமான மொழிகள்தான் முதலில் பரவியிருக்க வேண்டுமென்று ஒருவாறு நாம் ஊகிக்கலாம், யாகம், ஹோமம், அவிர்ப்பாகம், வேதம், உபநிடதம், சன்யாசம் முதலிய ஆரிய பதங்களெல்லாம் அக்கால முதல் இக்காலம் வரை ஏறக்குறைய அப்படியே தமிழில் உபயோகிக்கப்பட்டு இருக்கின்றன அல்லவா? வேதம் என்கிற பதத்திற்கு தமிழில் 'எழுதாக்கிளவி' என்று ஒரு பெயர். சம்ஸ்கிருத வேதம் அநேக நூற்றாண்டுகளாக எழுதப்படாமல், வாய்ப் பாடமாகப் பரம்பரையாகக் கற்கப்பட்டது; இதற்கு மற்றொரு பெயர் 'மறை' மறைந்த பொருளுடையது என்பதாம்.

சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு வந்த மொழிகளெல்லாம் தத்பவம், என்றும் தத்சமம் என்றும் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருக்கிறதை முன்பே குறித்துள்ளோம். தத்பவம் என்பவை பிரா கிருதத்தின் மூலமாக வந்த வடமொழிகளென்று ஒருவாறு கூறக் கூடும். தத்சமங்கள் நேராக சமஸ்கிருதத்திலிருந்து வந்தனவைகளாகக் கூறலாம். ஆதி காலத்தில் தமிழ் நூல்கள் இயற்றிய சைன வித்வான்கள் அநேக சமஸ்கிருத பதங்களை உபயோகித்திருக்கின்றனர் ஆயினும் பெரும்பாலும் அவைகளை தமிழ் மொழிப்போக்கிற்காக சிறிது மாற்றி உபயோகித்திருக்கின்றனர் : இவைகள் பெரும்பாலும் தத்பவங்களாம். உதாரணமாக ஜ, ராஜா என்னும் வடமொழியை