பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


每拳 பலவகையாகத் பிரித்திருந்தார். முக்கியமாக அகக் கூத்து, புறக் கூத்து என்பது. அன்றியும் வசைக்கூத்து, புகழ்க் கூத்து, வேத் தியல், பொதுவியல், வரிக்கூத்து, சாதிக்கூத்து முதலிய பிரிவு கள் இருந்தன. குரவை, கலிநடம், குடக்கூத்து, காணம், கோக்கு, தோற்பாவை, புரியம் எனும் பலவகைக் கூத்துகள் முற் காலத்தில் இருந்தன. இப்பெயர்களெல்லாம் பெரும்பாலும் தமிழ் மொழிகளே. அன்றியும் ஆடல் வகையில், கொடு கொட்டி, கடை யம், அயிரானி, மரக்கால், குடை, குடம், மல், துடி, பெரு முதலிய இவைகளெல்லாம் நாளாவட்டத்தில் மறைந்துபோயின. நாடகத்தைப்பற்றிய சுத்த தமிழ்மொழிகள் பூர்வீக தமிழில் இல்லையென்று நாம் எண்ணலாகாது. நாடகமாடுபவர்களைக் குறிக்கும் மொழிகள். கூத்தர் கண்ணுளார் என்பவைகளாம்! நேயத்தியம் என்பதற்கு கண்ணுளர் இருக்கை என்று கூறப்பட்டிருக்கிறது. நேபத்தியவிதானத்திற்கு, பழைய தமிழ்மொழி எழினி என்பதாம். பூர்வீக தமிழில் ஒருமுக எழினி, பொருமுகவெழினி, கரந்துவரல் எழினி என்று மூவகைத் திரைகள் கூறப்பட்டிருக்கிறது கவனிக்கற் பாலது. மறைந்துபோன பூர்வீக நாகரீக மொழிகள் தமிழ்நாட்டில் பூர்வீக நாகரீகம் மாறி, புதிய வழக்கங்கள் உண் டாக, சில பழைய தமிழ் பதங்கள் வழக்கற்றுப் போயின. (ரீ புரா ணம் எனும் ஜைன நூலில், இக்காலத்தில் வழங்காத பல தமிழ் மொழிகள், காணப்படும் என்று டாக்டர் சுவாமிநாத ஐயர் கூறியுள் எார்) இவற்றிற்கு சில உதாரணங்களை இங்கு கருதுவோம்: ஸ்திரிகள் முற்காலத்தில் செம்பஞ்சுக் குழம்பு கூட்டுதல் வழக் கமாயிருந்தது. தற்காலம் அவ்வழக்கம் அற்றுப் போகவே, செம்பஞ்சு என்ருல் இன்னது என்று தமிழர்களுக்கு அர்த்தம் சொல்லவேண்டி யிருக்கிறது. அவத்தகம் என்பது செம்பஞ்சுக் ஒப்பிற்கு, மற்ருெரு பெயராம்; இப்பதத்தை அகராதியில்தான் தற்காலம் காணலாம். கொய்யில் என்கிற பதத்திற்கு மகளிரின் தோள் ஸ்தனங் களில், வரி கோடு எழுதும் சந்தனக் குழம்பு என்று நாம் அகராதி யைப் பார்த்து அர்த்தம் அறிந்துகொள்ளவேண்டியவர்களாயிருக்