பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3

கும் பாராங்கற்கள் (Granite rock) ஆதிகால முதல் கற்பாறைகளாகவே இருந்திருக்க வேண்டுமென்று அந்த சாஸ்திரறிஞர்கள் அபிப் பிராயப்படுகின்றனர். ஆகவே, இப்பூமண்டலத்தில் மனிதர்கள் மேற் சொன்னபடி, பல இடங்களில் ஏககாலத்தில் உற்பத்தியாயிருந்தால், தென் இந்தியாவிலும், மனிதர்கள் ஆதிகாலத்திலேயே உண்டாயிருக்க வேண்டுமென்று எண்ண ஆதாரமுண்டு. இவ்வாறு நாம் எண்ணுவது, சில வருடங்களுக்குமுன் வட இந்தியாவில் சர். ஜான் மார்ஷல் (Sir John Marshali) (Mohenjo Daro) ஹாரப்பா (Harappa) என்னும் ஊர்களில் ஆழமாய்த் தோண்டி கண்டுபிடித்த கட்டிடங்களைப்பற்றி, எழுதியிருக்கும் விஷயங்களினால், மிகவும் ஊர்ஜிதமடைகிறது. அந்த சாஸ்திரறிஞர், அவ்வூர்களில் கண்டுபிடிக்கப்பட்ட செங்கற் கட்டிடங்கள் இன்றைக்கு சுமார் 5000 வருடங்களுக்குமுன் இருந்தனவென்று கூறி அவைகள் தென் இந்தியாவிலுள்ள திராவிட நாகரீகத்திற்கு மிகவும் ஒற்றுமை உள்ளன வாயிருக்கின்றனவென்று நிரூபித்துள்ளார். ஆகவே திராவிட நாகரீக மானது ஆதிகாலம் தொடங்கி தென் இந்தியாவில் பரவியிருக்க வேண்டுமென்பது திண்ணமாம். திராவிட நாகரீகமானது மேற்கூறிய படி புராதனமாய் இங்கிருந்திருந்தால், திராவிட பாஷையும் அதனுடன் உற்பத்தியாய் இருக்கவேண்டும் என்று நினைத்தல் நியாயமெனத் தோன்றுகிறது.


தமிழில் மிகவும் பழைய நூலாகிய தொல்காப்பியத்தில் தமிழ் அகத்தை நான்கு பிரிவாக, குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் எனப் பிரித்து, இந்நாற்பாங்கு நிலத்தில், ஒவ்வொன்றிலும் வாழும் மனிதர்களைப் பற்றியும், அவர்களுடைய தொழில்களைப்பற்றியும் நாகரீகத்தைப்பற்றியும் கூறியிருப்பது, திராவிடர்கள் தென் இந்தியாவில் தொன்று தொட்டு வசித்து வருகின்றனர் என்பதை ஒருவிதத்தில் மிகவும் ஊர்ஜிதப்படுத்துகிறதெனக் கூறலாம். ஆகவே தமிழ் பாஷையானது உலகத்தில் மிகவும் புராதன பாஷைகளில் ஒன்று என்று நாம் எண்ணுவதில் தவறில்லை.


மேற்குறித்தபடி ஆதி மனிதர்கள் முதலில் வேட்டையாடி ஜீவித்தும், பிறகு ஆடுமாடுகளை மேய்த்து ஜீவித்தும், நீர் நிலைகளில் மீன் முதலியவற்றைப் பிடித்து ஜீவித்தும் பிறகு நிலத்தை உழுது பயிரிட்டு ஜீவித்தும், கடைசியில் வீடு முதலியவைகளைக் கட்டிக் கொண்டு பட்