பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


辑森 பெயர்களையும், கண்ணகி, மாதவி, கவுந்தி, அஃதை, சோணனை, அங் கவை பரவை முதலிய பெண்டிரின் பெயர்களையும் கூறலாம். இப் பெயர்களெல்லாம் அவர்களின் பெற்ருேர் வைத்த பெயர்களைப்போல் காண்கின்றன. எழிலி. காரி ஒரி, ஒன்னி, பாரி, பேகன், மலேயன் எனும் கடை எழுவள்ளல்களின் பெயர்களையும் கவனிக்க பூர்வீக அரசர்களுடைய பெயர்களில் சேரமான் பெருஞ் சேரலிரும்பொறை, முதுகுடுமிப் பெருவழுதி, நலங்கிள்ளி முதலியற்றை கவனிக்க செழி யின் வழுதி என்பது பாண்டிய அரசர்களின் பெயராம்; கிள்ளி என்பது சோழ அரசர்களுடைய பெயராம். பொறை என்பது சேர அரசர் களின் பெயராம். வடமொழிக் கலப்பு வந்த பிறகு பெரும்பாலும் பெயர்க ளெல்லாம் சமஸ்கிருத மொழிகளாக மாற்றப்பட்டன; உதாரணமாக, குலோத்துங்கன், பராந்தகன், அனபாயன், ராஜசிம்ஹன், விஷ்ணு iர்த்தனன், ராஜேந்திரன், விஜயவர்மன், மஹேந்திரவர்மன் முதலிய ஆண் மக்கள் பெயர்களையும், மாதவி, மணிமேகலை, காமாட்சி, விசா லாட்சி முதலிய ஸ்திரிகளின் பெயர்களையும் கூறலாம், . இனி சங்கப் புலவர்களின் பெயர்களைக் கருதுமிடத்து, முதல் இடைச் சங்கங்கள், இருந்தனவோ இல்லையோ என்று சிலர் சந்தேகிக் கிறபடியால், அப்பெயர்களைவிட்டு, கடைச் சங்கப் புலவர்களின் பெயர்களுள் சிலவற்றைக் கருதுவோம்; சிறு மேதாவியர், சேந்தம்பூத ஞர், அறிவுடையனர், நக்கீரனர் முதலியோர் கடைச் சங்கத்துப் புல வர்களுள் சிலருடைய பெயராகும்; இவற்றுள் சிறு மேதாவியர், பெருங் கூற்றுக்கிழார் முதலிய பெயர்கள் அவர்கள் தந்தை தாயார் இட்ட பெயராகத் தோன்றவில்லை. அவர்களுடைய சிறப்புபெயர்களாக தோன்றுகிறது. இப்பெயர்களுள் சிலவற்றை எடுத்துக்கொண்டு ஆராய்வோம்:- . (1) சிறு மேதாவியர் என்பது அவரது புத்தியைக் குறிக்கும் இறப்புப் பெயராகத் தோன்றுகிறதேயொழிய அவரது நாமகரண காலத்தில் வைத்த பெயராகக் காணுேம். (2) ஆதங்கோட்டாசான் இதைப் படித்து பார்க்குமிடத்து ஆதங்கோடு என்னும் ஊரிலுள்ள ஆசான்-ஆசிரியன் என்று