பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


30 (37) பறையர் என்ருல் பறையடிப்பவர் என்று பொருள்படும். பறை என்பது புராதனமான ஓர் வகைத் தோற்கருவி ஆதிகாலத்தில் அரசர்களது ஆக்கிணைகளை சாதாரண ஜனங்களுக்கு பறையரைவித்து தான் தெரியப்படுத்தினர். தற்காலமும் கிராம தேவதைகளின் உற் சவாதிகளை பறை சாற்றித் தெரிவித்தல் என்கிற வழக்கத்தைக் கவனிக்க. மாட்டின் தோலை உறித்து பறைகள் செய்து அவற்றை முழக்கும் ஆதி ஜனங்களுக்கு பறையர் என்று பெயர் வந்ததாம்; ஆகவே ஆதிகாலத்தில் இவர்கள் கீழ்ப்பட்ட ஜாதியாராக மதிக்கப்பட் டனர். இவர்கள் திராவிடர்களால் ஜெயிக்கப்பட்ட ஆதி ஜாதியார் என்று சிலர் எண்ணுகின்றனர்; தற்காலம் இவர்களும் நாகரீகம் அடைந்த பிறகு இவர்களை ஆதிதிராவிடர்களென்று அழைக்க வேண் டும் என்று ராஜாங்கத்தார் உத்தரவு செய்திருப்பதைக் கவனிக்க. (38) பு:லயன். புலால்-மாமிசம் உண்பவன் பு:லயன். முத்தரையர் என்பது முத்தேசத்து அரசர் என்பதின் குறுக லான பட்டப் பெயர். இவர்கள் சந்ததியார்களுக்கு முத்தரையர் என்று பெயரென சிலர் கூறுகின்றனர். அம்பலக்காரர் அம்பலம்=வெளியிடம், சபை கூடுமிடம், அல்லது கட்டடம் என்றும் பொருள்படும். இதிலிருந்து அச்சபை களைக் கூட்டும் ஊர்த் தலைவனுக்கு அம்பலக்காரன் என்று பெயராயது. - வலங்கை இடங்கை ஜாதிகள் தமிழ் நாட்டில் வழங்கும் ஜாதிப் பெயர்களை ஆராயுங்கால் முக்கியமாக தொண்டைமண்டலத்தில் வலங்கை இடங்கை ஜாதிகள் என்று இரு பிரிவாக்கப்பட்டிருப்பதை நாம் கவனிக்கவேண்டியது அவசியமாகிறது. வலங்கை ஜாதிகள்-உதாரணம் இடங்கை ஜாதிகள்-உதாரணம் வெள்ளாழர் வடுகுசெட்டிகள் ரெட்டிகள் வன்னியர் கோமட்டிகள் பள்ளிகள் கம்மவார் கரும்ார்