பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3艺 இருப்பிடத்தையே குறிப்பதாயிருந்தது. மேற்கு நாட்டிற் கிடைத்த சில பழய தமிழ்க் கல்வெட்டுகளில் கோயில் என்னும் பதம் அரசனது மாளிகை என்கிற அர்த்தத்திலேயே உபயோகிக்கப் பட்டிருக்கிறது. அன்றியும் அங்குள்ள சில யூதர்களுடைய சாசனங் களிலும் தமிழ் அர்த்தத்தில் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. தற்கால மும் மலையாளத்தில் கோயில் தம்புரான் என்னும் சொற்ருெடரைக் கவனிக்க. தற்காலம் தமிழ் நாட்டில் இப்பதம் தேவாலயம் எனும் அர்த்தத்தில்தான் வழங்கப்படுகிறது. இவ்வாறு இம்மொழி அர்த்தம் மாறியதற்கு இரண்டு காரணங்களிருக்கலாம். ஒன்று ஆதிகாலத்தில் அரசரது இருப்பிடங்களில் தெய்வங்கள் வைக்கப்பட்டு, பூசிக்கப்பட் டிருத்தலால் கோயில் என்பது தெய்வமிருக்குமிடம் என்று அர்த்தம் மாறி யிருக்கலாம், அல்லது அரசர்களுக்கெல்லாம் அரசனைவர் ஈசன் ஆனபடியால் அவர் இருப்பிடத்திற்கு சிறப்புப்பெயராக கோயில் என்பது வழங்கப்பட்டிருக்கலாம். (2) பலஹாரம். பலம்+ஆஹாரம் =பலஹாரமாயது. அதா வது பலங்களைச் சாப்பிடுவது என்று பொருள்படும். பலம் என்ருல் பழம். ஆகவே பழவர்க்கங்களை மாத்திரம் புசிப்பது என்று அர்த்த மாகும். இதைவிட்டு இப்பதத்திற்கு தற்காலம், அரிசிச் சாப்பாட்டை விட்டு வேறு எதையும் புசிப்பது எனும் அர்த்தத்தில் இம்மொழி உப யோகிக்கப்படுகிறது. அதாவது அரிசியை புசிப்பதைவிட்டு, போளி ஆமவடை, சர்க்கரைப் பொங்கல், லட்டு, பாயசம் முதலிய எல்லா பட்சணங்களையும் புசிக்கலாம் என்று எண்ணப்படுகிறது. இச்சந்தர்ப் பத்தில் ஒருபொழுது என்பதையும் கவனிக்க. பதத்திற்குப் பொருள் ஒரே வேளை புசிப்பது என்றும்; அதைவிட்டு தற்காலம் ஒருபொழுது என்ருல், ஒரு வேளை அரிசிச் சாதம் புசித்துவிட்டு, மற்ற வேளைக்குப் பட்டினியாயிராது, பாதுமைஹல்வா, பால் கோவா, பகோடா, கார பூந்தி முதலியவற்றை புசிக்கும் வழக்கத்திற்கு இப்பதம் உபயோகப் படுகிறது. (3) சகுனம் இது சமஸ்கிருத மொழியாம்; பட்சி என்று பொருள்படும். ஆதியில் கருடன், காகம், வல்லுறு முதலிய பட்சிகள் வலமிருந்து இடம்போனல், அல்லது இடமிருந்து வலம் போனுல் இன்னின்ன நேரிடும் என்று பட்சி சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக் கிறது. ஆகவே எதாவது காரியத்தை ஆரம்பிக்கும்போது சகுனம்