பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 பார்ப்பதென்றல், பட்சிகள் எப்படிப் போகின்றன என்பதை கவ் னித்து தாங்கள் மேற் கண்ட காரியம் சித்தியாகுமா ஆகாதா என்று கவனிப்பது வழக்கமாயிருந்தது. தற்காலத்தில், இப்பதத்தின் ஆதி அர்தத்தை மறந்து தும்பல், மழை பெய்தல், ஒற்றை பிராமணன் எதிர் வரல், பூனே குறுக்கிடல் முதலிய எல்லாவற்றிற்கும் சகுனம் என்னும் பதம் உபயோகிக்கப்பட்டு வருகிறது. (4) நாற்றம் என்ருல் வாசனை என்றுதான் அர்த்தம் பொது வில்; அது நல்ல காற்றம், துர்நாற்றம் இரண்டையும் குறிக்கும் சொல் லாம். வாசனை என்கிற சொல்லும் நல்ல வாசனை கெட்ட வாசனை இரண்டையும் குறிக்கும் மொழியாம். ஆயினும் நாளாவர்த்தத்தில் நாற்றம் என்ருல் கெட்ட நாற்றம் என்கிற அர்த்தத்திலேயே உபயோ கிக்கப்படுகிறது. பழய நூலில் 'பொன் மலர் நாற்றமுடைத்து ? என்பதில் நாற்றம் என்பது நல்ல வாசனையுடையது என்னும் அர்த்தத் தில் உபயோகிக்கப்பட்டிருப்பதைக் காண்க. தற்காலத்தில் நாற்றம் அடிக்கிறது என்ருல் கெட்ட நாற்றம் வீசுகிறது என்றப் பொருளையே தரும். இங்ங்னமே வாசனை என்கிற பதம் நல்ல மணத்தையே தற் காலம் குறிக்கிறது. மணம் என்கிற பதமும் இத்தகைத்தே. நல்ல வாசனையைக் குறிப்பதானுல் பூர்வீகர்கள் நறுமணம் என்று உபயோ கித்திருக்கின்றனர். தற்காலம் மணம் என்ருல் நல்ல வாசனைக்குத் தான் உபயோகிக்கப்படுகிறது, சாக்கடை மணம் வீசுகிறது என்று சொல்வாரில்லை. (5) ஸ்தனம் என்பது சமஸ்கிருதத்திலிருந்துவந்த மொழியாம். ராமாயணம் முதலிய பழைய சம்ஸ்கிருத நூல்களில் இப்பதம் ஆண் மக்கள், ஸ்திரீகள் இருவர்களுடைய மார்பிற்கும் பொதுவாக உப யோகிக்கப்பட்டிருக்கிறது. ஸ்தனந்தரே என்று ராவணன், லட்சுமணர் முதலியவர்களுடைய மார்பிற்கு உபயோகப்பட்டிருக்கிறது. தமிழில் இம்மொழி உபயோகத்திற்கு வந்த பிறகு பெண்டிருடைய அவயவத் திற்கே உரித்தான பதமாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆண் மக்க ளுடைய அவயவத்திற்கு மார்பு என்பது வழங்கலானது. (6) காரி என்னும் பதம் ஸ்திரி என்னும் அத்தமுடைய சமஸ்கிருத மொழியாம்; இதற்குப் பொதுவில் பெண்பால் என்றே அர்த்தமாகும். நா. மணி என்ருல் ஸ்திரி ரத்தினம் என்று பொருள்