பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34 படும். ஆயினும் தற்காலம் ஒரு ஸ்திரியைப் பார்த்து ஒருவன் நாறி என்று அழைப்பானைல், அது வசையாக மதிக்கப்படும்; இதை நாரி என்று வல்லினத்துடன் உபசரித்து வசையாக்கியதை ஆராய்ந்து அறிந்துகொள்க. - (7) பரதேசி என்கிற பதத்திற்கு வேறு தேசத்திலிருந்துவந்த வன் என்பதே முதற் பொருளம்; அதாவது வேற்றுரார் என்பதாம்; அவன் பணக்காரணுயிருக்கலாம்; ஏழையாயிருக்கலாம். ஆயினும் தற் காலம் இம்மொழி, ஏழை, பிச்சைக்காரன் என்கிற பொருளிலேயே உபயோகப்படுகிறது. இதற்குக் காரணம் சாதாரணமாக ஒருவன் ஒரு தேசத்தைவிட்டு மற்ருெரு தேசத்திற்குப் போய் வாழப் பார்ப்பவன், பெரும்பாலும் ஏழையாய்த்தானிருப்பான் என்பதாம். (8) பஜாரி என்பது பஜார் எனும் ஹிந்துஸ்தானி பதத்தி லிருந்து தமிழுக்கு வந்த மொழியாம். பஜாரி என்ருல் கடைக்காரி என்று பொருள்படும். தற்காலம் பஜாரி என்ருல் சண்டைக்காரி எனும் பொருளில் வழங்கப்படுகிறது; சாதாரணமாக கடைக்காரி கள் சண்டைக்காரிகளாயிருப்பதால் இம்மாதிரியான அர்த்தத்திற்கு இடங் கொடுக்கலாயிற்று என்பதற்கு சந்தேகமில்லை; தண்டு பஜாரி எனும் சொற்ருெடரையும் காண்க: சாதாரணக் கடைக்காரிகளே சண் டைக்காரிகளாயிருந்தால், தண்டு அல்லது சைனியத்துடன் செல்லும் சண்டைக்காரிகள் இன்னும் அதிக கூச்சலிட்டு சச்சரவிடும் பெண்டிரா யிருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. (9) சீமை என்ருல் தேசம் என்று பொதுவில், பொருள்படும் ஆயினும் தற்காலம் அது வேறு தேசத்தைக் குறிப்பதாக உபயோகப் பட்டு வருகிறது. சீமையிலிருந்து வந்ததென்றல், வேறு தேசத்தி லிருந்து வந்தது என்று அர்த்தமாகும். சீமைச் சரக்கு, சீமைப் பெருச் சாளி, சீமைக்கரி, சீமைச் சுண்ணும்பு என்பதைக் காண்க; அதிலும் மேற்கிலுள்ள வேறு தேசங்களுக்குத்தான் இப்பெயர் அடைமொழி யாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. சாதாரணமாக சீமை என்ருல் இங்கிலாண்டு தேசத்தைத்தான் குறிப்பதாகும். சீமைக்குப் போகி ருன் என்ருல் இங்கிலாண்டுக்குப் போகிருன் என்றுதான் அர்த்தமாகும். இதற்குக் காரணம் நமது அரசாங்கத்தார் அங்கிருந்து வந்தவர்களா தல் பற்றி, என்பது கூருமலே தெரியும். . . . .