பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4

 கத்தம் என்ருல் ஒர் ஊரில் குடியிருப்பிடமாம், வடமொழியர் தென் ஒட்டிற்கு வந்த பிறகு பிராம்மணர்கள் வசிக்குமிடத்திற்கு அக்ரஹா ரம் என்று பெயர் வந்தவுடன், பிராம்மணர்கள் அல்லாதார் வசிக்கு மிடத்திற்கு நத்தம் என்று வழங்கலாயிற்று. தற்காலமும் கிராமநத்தம் என்றால், வீடுகள் கட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட நிலத்திற்குப் பெயராகும்.


தாங்கல் என்று சில ஊர்களுக்குப் பெயர் உண்டு. தாங்கல் என்றால் நீர் நிலை, நீர்தங்குமிடம், என்று பொருள் உண்டு. அதனின் றும் இவ்வூர்களுக்கும் அப்பெயர் வந்திருக்கக் கூடும். (சென்னைக்கு வடக்கில் ஒரு இடத்திற்கு தாங்கல் என்று பெயர் உண்டு.)


களம் என்றால் இடம் என்று பொருள்படும். திருக்ஷேத்திரக் கோவையில் களம் அஞ்சும், என்றிருப்பதைக் காண்க. அஞ்சைக் களம், நெடுவங்களம் வேட்களம்.


குளம், கரை, துறை என்று முடியும் ஊர்களுக்குப் பெயர் வந்தது நாம் கூறாமலே அர்த்தமாகும்.


பட்டு என்பது தமிழ் மொழியாம் பட்டு என்றால் சிற்றுார் என்று பொருள் படும் உதாரணமாக, சேத்துப்பட்டு, செங்கல்பட்டு முதலிய வற்றைக் காண்க.


தேசம், மண்டலம், கிராமம், ககரம் என்னும் சொற்கள் வட மொழியினின்றும் வந்தனவாம்.

இனி தமிழ் நாட்டிலுள்ள சில ஊர்களின் பெயர்களை எடுத்துக் கொண்டு அவைகளைப் பற்றி நாம் அறியக்கூடிய விஷயங்களை சிறிது ஆராய்வோம்.


(1) காவிரிப்பூம்பட்டினம். இது சமுத்திரக்கரையோரம் இருந்த ஊராகையால் பட்டினம் எனப் பெயர் பெற்றது, காவிரி நதி இங்கு சமுத்திரத்தில் சங்கமமாகிறபடியால் காவிரிப்பூம்பட்டினம் என்றாயது. இப்பெயரை நோக்கும்போது காவிரி-புகும்-பட்டினம், அதாவது காவிரியானது சமுத்திரத்தில் புகுமிடத்திலுள்ள பட்டினம் என்று இப் பெயர் வந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது, இதற்கு புகார் என்று மற்றொரு பெயர் உண்டு. ஆறு புகு மிடம் என்று பொருள் கூற இப் பதமும் இடங்கொடுக்கிறது. சங்க காலத்தில் இடையின ராகமும் வல்லின ராகமும் மாறி உபயோகிக்கப்பட்டிருக்கின்றது.