பக்கம்:தமிழ் அமுதம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வகைகளும் பயிராகின்றன. இன்னும் பதப் படுத்தப் படாத இடங்கள் இவை இவை என்ற விவரங்கள் பொது மக்களுக்குத் தேவைப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு மலைத் தொடரைப் பற்றிய விவரங்கள் பைந்தமிழில் வெளி வருதல் வேண்டும். வேலையில்லாத மக்களை இத்தகைய மலைப் பகுதிகளில் குடியேற்றி நிலங்களைத் திருத்தி வாழச் செய்யலாம். இவ்வாறே தமிழகத்துக் காடுகள் இவை, இவற்றால் உண்டாகும் பயன்கள் இவை என்பன போன்ற விவரங்களையும் தமிழில் தருதல் வேண்டும். தமிழ் நாட்டில் இன்று விஞ்ஞான அறிவால் நடைபெறும் தொழில்கள் இவை என்ற விவரங்களும் தேவை.

கல்வித் திட்டம்

தமிழ் நாட்டு மாணவர்க்கு எட்டாம் வகுப்பு வரையில் தமிழ் நாட்டு நிலநூல், வரலாறு, கைத்தொழில், பயிர்த் தொழில், போக்கு வரவு, ஏற்றுமதி இறக்குமதி, வாணிகம், சமுதாய நிலை முதலியவை பற்றிய அறிவை நன்கு வளர்க்கும் முறையில் புதிய பாடத் திட்டம் அமைய வேண்டும். ஒவ்வொரு தமிழ் மகனும் தன் நாட்டைப் பற்றிய எல்லா விவரங்களும் அறிந்துகொள்ளும் முறையில் கல்வித் திட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதனை விடுத்து உலக நாடுகளைப் பற்றி அவன் அறிவு பெறுவதில் என்ன பயன் உண்டாகும்?

முடிவுரை

தமிழ் மக்களுக்கு இன்றுள்ள நிலையில் நாட்டு வளத்தை அறிவிக்கும் முறைகளில் பொருட்காட்சியும் ஒன்றாகும். தமிழ் நாட்டு விளை பொருள்களும் செய் பொருள்களும், தமிழ் நாட்டுத் தொழில்களை வளப் படுத்தும் விஞ்ஞானக் கருவிகளும் இடம் பெறும். மக்கள் இவற்றைப் பார்த்து அறிவு பெறுதல் நல்லது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/14&oldid=1459117" இலிருந்து மீள்விக்கப்பட்டது