பக்கம்:தமிழ் அமுதம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

பாடுவதுபோலவும் பல பாடலகள் காணப்படுகின்றன. மார்கழி நோன்பு பற்றிய விவரங்கள் யாவும் திருவெம்பாவை என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளன. இப்பாக்களின் நடை மிகவும் எளிமையுடையது; படிக்கப் படிக்க இன்பம் பயப்பது.

திருக்கோவையார் என்பது அகப்பொருளைப் பற்றிய முதல் கோவை நூல் : கட்டளைக் கலித்துறை என்னும் பாவினால் இயன்றது. தன்னைத் தலைவியாகவும் இறைவனைத் தலைவனாகவும் வைத்து மாணிக்கவாசகர் பாடிய இந்நூல், கோவை நூல்களுள் காலத்தால் முற்பட்டது என்று சொல்லலாம்.

ஒன்பதாம் திருமுறை : கருவூர்ச் சித்தர் போன்ற சிவனடியார் பலர்-நாயன்மார்களுக்குப் பின் வாழ்ந்தவர்பாடிய பாக்களின் தொகுதி. இதில் சில புதிய தலங்களின் பெயர்கள் காணப்படுகின்றன. பாடல்கள் மிகவும் எளிமையானவை; சிறந்த புலமையைத் தெரிவிப்பன அல்ல.

பத்தாம் திருமுறை : இது திருமூலர் பாடிய திருமந்திரம் என்பது. இதன்கண் பலவகைச் சக்கரங்களின் பொருள், சைவ சமயத்தின் உட்பிரிவுகள், கோவிலின் தேவை, அரசனது பொறுப்பு, நல்லொழுக்கத்தைப் பற்றிய செய்திகள், சிவலிங்க அமைப்பு முதலிய சமயத் தொடர்பான செய்திகள் பல கூறப்பட்டுள்ளன. இது மூவாயிரம் விருத்தப் பாடல்களை உடையது. திருமூலர் கி. பி. 400-600 என்னும் கால எல்லையுள் வாழ்ந்தவர்.

பதினோராம் திருமுறை : கி. பி. 6-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்காலம்மையார், ஐயடிகள் காடவர் கோன், கி. பி. 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேரமான் பெருமாள் நாயனார், கி, பி. 10-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/58&oldid=1459177" இலிருந்து மீள்விக்கப்பட்டது