பக்கம்:தமிழ் அமுதம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

சிந்தாமணி முதலியன : சமண நூல்களான சீவக சிந்தாமணி, சூளாமணி என்பன கி. பி. 10-ஆம் நூற்றாண்டு நூல்கள் எனலாம். இவை விருத்தப்பாவில் இயன்றவை. சிந்தாமணி விருத்தப்பாவில் இயன்ற முதற் பெருங் காவியம் ; நாலாயிரம் பாடல்களுக்கு மேற்பட்டது; சொல்லழகும் பொருளாழமும் பொருந்தியது. பின்வந்த பெரிய புராணம், கம்ப இராமாயணம் முதலிய பெரிய நூல்களுக்கு இது கருத்துக்களையும் சொற்களையும் சொற்றொடர்களையும் உதவியது. இதன்கண் அக்கால அணி வகைகள், உடை வகைகள், சமண சமயக் கொள்கைகள், சமணர் பழக்க வழக்கங்கள் முதலியன இடம் பெற்றுள்ளன.

கலிங்கத்துப்பரணி

இது முதற் குலோத்துங்க சோழன் செய்த கலிங்கப் போரைப் பற்றியது. இதனைப் பாடியவர் சயங்கொண்டார். இது பரணி நூல்களுள் தலை சிறந்தது. சொல்லழகும் பொருட்செறிவும் உடையது ; கவிதை நயம் சிறந்தது ; சோழர் பரம்பரைபற்றிய விவரங்களும் போர்ச் செய்திகளும் தமிழர் பழக்கவழக்கங்கள் சிலவும் இதில் குறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறே கி. பி. 12-ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் தக்கனது யாகத்தைப்பற்றி ஒரு பரணி பாடியுள்ளார். அவர் விக்கிரம சோழன், அவன் மகனான இரண்டாம் குலோத்துங்க சோழன், அவன் மகனான இரண்டாம் இராசராசன் ஆகிய மூவர்மீதும் மூன்று உலா நூல்களைப் பாடினார்.

கம்பராமாயணம்

கி. பி. 12-ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக்காலத்தில் கம்பரால் இராமா-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/60&oldid=1459179" இலிருந்து மீள்விக்கப்பட்டது