பக்கம்:தமிழ் அமுதம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

வேண்டும். சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்னும் பாகுபாடுகளுள் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும். காவியத்தில் மிக்க சுவையும், பாவமும் யாவரும் விரும்பத் தக்க அமைப்பும் அமைந்திருத்தல் வேண்டும்.

காப்பியங்களால் அறியப்படுவன

1. குறிஞ்சி முதலிய திணைகளின் இயல்புகளும் அத்திணை மக்களின் பழக்க வழக்கங்களும் அறியலாம்.
2. கதைத் தொடர்புடைய நகரங்களின் அமைப்பு, நகரமக்களின் தொழில், அவர்தம் பழக்க வழக்கங்கள், சமயங்களின் நிலைமை, ஆட்சிமுறை முதலியவற்றை அறியலாம். 
3. கதையின் உயிர்நாடியாக விளங்கும் தலைவன், தலைவி இவர்தம் நற்பண்புகளையும், அவற்றால் அவர் பெற்ற சிறப்புக்களையும், தீயபண்புகளாயின் அவற்றால் அவர் பெற்ற இழிநிலையினையும் அறியலாம்.
4. நாட்டு வரலாறு பற்றிய செய்திகளையும் அறிய வாய்ப்புண்டு. 
5 விழாக்கள், சடங்குகள், மணமுறை இன்ன பிற வற்றையும் தெளியலாம். 
6. காவியம் எழுந்ததன் கருத்தையும் உணரலாம்.
7. காவிய காலத்தில் நாடு இருந்த நிலையையும், மக்களுடைய நாகரிகம் பண்பாடு ஆகிய இவற்றையும் ஒருவாறு கண்டறியலாம், 
8. இவையனைத்திற்கும் மேலாக மனித நலத்திற்கு அக்காவியம் எவ்வகையில் பயன்படுகிறது என்பதையும் கண்டு தெளியலாம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/71&oldid=1459190" இலிருந்து மீள்விக்கப்பட்டது