பக்கம்:தமிழ் அமுதம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

சமயநூல்களால் அறியப்படுவன

1. ஒருநூல் எந்தச் சமயத்தைச் சார்ந்ததோ அச்சமயத்தின் கொள்கைகளையும் நடைமுறைகளையும் அந்நூலைக் கொண்டு அறியலாம்.

2. தலந்தோறும் சென்று பாடப்பெற்ற திருமுறை நூல்களால் பல தலங்களைப் பற்றிய அமைப்புக்களை அறியலாம். இயற்கை, செயற்கைக் காட்சிகளை அறிந்து இன்புறலாம்,

3. பல கோவில்களைப் பற்றிய விவரங்களை உணரலாம். நாட்டில் வழக்கிலிருந்த வழிபாட்டுமுறைகள், விழாக்கள், பலகடவுளர் பெயர்கள் முதலிய பலவற்றை அறியலாம்.

4. அடியார்கள் சமயத்திற்காகச் செய்த தொண்டுகளை உணரலாம்.

5. இறைவனைப் பற்றி நாட்டில் வழங்கிய வரலாறுகள் பலவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.

6. கோவில்களின் அமைப்பு முறைகளையும் வகைகளையும் அறியலாம்.

7. புறச் சமயங்களைப் பற்றிய கொள்கைகளையும் தெளியலாம்.

8. நாட்டு வரலாற்றுத் தொடர்பான குறிப்புக்களையும் ஒரளவு உணரலாம்.

9. பாவகைகள் எங்ஙனம் வளர்ச்சி பெற்றன என்பதையும் ஒரளவு காணலாம்.

10. அக்கால வழக்கிலிருந்த தமிழ்ப்பண்கள் எவை என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

11. சமயகரல மக்களுடைய பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், பொருளாதார நிலை, கல்விநிலை, முதலியவற்றை அறியலாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/72&oldid=1459191" இலிருந்து மீள்விக்கப்பட்டது