பக்கம்:தமிழ் இனம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணகி

69

காண்பாள்’ எனக் கூறியது. அது சென்ற பின்பு கண்ணகி,

“கருத்துறு கணவன் கண்டபின் அல்லது
இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலன் ”

எனக் கூறிக் கொற்றவை வாயிலிற் பொற்றாெடி தகர்த்து, மீண்டும் வருந்தி,

“கீழ்த்திசை வாயிற் கணவனொடு புகுந்தேன் ;
மேற்றிசை வாயில் வறியேன் பெயர்வேன் ”

என்று துன்புற்றவளாய் வழிநடந்தாள். இந்நிலை எண்ணியெண்ணி இரங்கற்குரியது. அவளது மன நிலையில் ஒவ்வொருவரும் இருந்து நினைப்பின், இத்துன்ப எல்லையின் முகட்டினைச் சிறிது உய்த் துணரலாம். இது மனத்தை உருக்கும் இடமாகும்.

இங்ஙனம் மயங்கி மயங்கி வழிநடந்தவள் திருச் செங்குன்றுார் மலையுச்சி அடைந்தாள் ; ஆண்டிருந்த குறவர் இவளையாவள் என வினவ, “ தீத்தொழிலாட்டியேன் யான்”, என்று கூறி ஏக்க முற்று நின்றிருந்தாள். பதினான்காம்நாள் கோவலன் வந்து விண்ணக விமானத்தில் அம் மாபத்திணியை அழைத்தேகினான். கட்டுரை காதை ஈற்று வெண்பா ஒன்றில் இளங்கோ அடிகள் இவ்வீர பத்தினியின் கற்பின் பெட்பினைக் கூறுதல் கவனிக்கத்தக்கது :

“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளைத்
தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால்-தெய்வமாய்
மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி
விண்ணக மாதர்க்கு விருந்து.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/66&oldid=1359133" இலிருந்து மீள்விக்கப்பட்டது