பக்கம்:தமிழ் இனம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

தமிழ் இனம்

கண்ணகி விழா

மலையுச்சியிலிருந்து மாண்புறு கணவனைக் கலந்த காரிகையைக் கொண்டாடி குன்றமக்கள் குரவைக் கூத்தாடினர். அவர்கூற, தன்னுடடைந்த பத்தினிக்குப் பெருமைபுரிய விழைந்தான் சேரன் செங்குட்டுவன்; அவன் மாபத்தினியான இருங்கோ வேண்மாள், “ நம் அகல்நாடு அடைந்த இப்பத் திணிக் கடவுளைப் பரசல் வேண்டும்” என்று கூறினாள். செங்குட்டுவன் இமயஞ்சென்று கல் கொணர்ந்து, கண்ணகி உருவந்தீட்டிக் கோயில் கட்டி விழாச் செய்தான். அங்கு, கண்ணகித் தெய்வம் விண்ணிடைத் தோன்றி,

‘’தென்னவன் தீதிலன்; தேவர்கோன் தன்கோயில்
நல்விருந் தாயினன்; நானவன் தன்மகள்;
வெள்வேலாள் குன்றில் விளையாட்டு யானகலேன்”

என உரைத்து, விழா முடிவில், “ செங்குட்டுவன் வாழ்க!” என்று ஆசீர்வதித்தது.

அவ்வெல்லை, ஆரிய மன்னரும் சிறை நீக்கப் பெற்ற வேந்தரும் கொங்கரும் மாளுவரும் இலங்கைக் கயவாகு வேந்தனும் தத்தம் ஊர்களில் கோயில் கொண்டருள வேண்டுமெனப் பத்தினிக் கடவுளைப் பரவ, “தந்தேன் வரம்” என அத்தெய்வம் வரம் தந்தது.

இத்துணைப் பெருமையுற்ற தெய்வம் இத்தமிழகத்து வேறுண்டெனக் கேட்டிலேம். கண்ணகி-தன் கற்பின் கவினால் கடவுள் தன்மை எய்தினாள். கற்பின் உயர்வே உயர்வு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/67&oldid=1390587" இலிருந்து மீள்விக்கப்பட்டது