பக்கம்:தமிழ் இனம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணகி

71


புலமையும் பெருமையும்

இப்பத்தினி கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தாள் என்பது தெரிகிறது. யாப்பருங்கல விருத்தியுரை' ஆசிரியர் ‘பத்தினிச் செய்யுள் இது’ என இரண்டோரிடங்களிற் சுட்டிக் காட்டுதலாலும், பத்தினி என்னும் சொல்வழக்கு இன்றளவும் கண்ணகியையே குறித்து வருதலாலும், அச்செய்யுட்கள் இப்பெண் தெய்வத்தால் பாடப்பெற்றனவே எனத் துணிதலில் தவறில்லை.

இன்றளவும் இம்மாபத்தினியின் ‘பத்தினி’ என்னும் நாமம் தமிழகத்து எல்லா மாதரிடமும் வழக்குப் பெற்றுள்ளது. என்னை ? “இவள் பத்தினியோ? சொன்னவுடனே பலித்துவடுமோ?” என ஏசுதலிலிருந்தே, “பத்தினி-கண்ணகி அவள் சொன்ன சொல் பலித்தது” என்பது பொருளாதலின் என்க. தமிழ்ப் பற்றுடையோர் ‘நெஞ்சை யள்ளும் சிலப்பதிகாரம்’ என்னும் செந்தமிழ்ச் செல்வத் தீந்தேனை நுகர்ந்து இன்புறுவாராக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/68&oldid=1359151" இலிருந்து மீள்விக்கப்பட்டது