பக்கம்:தமிழ் இனம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6. சாக்கைக் கூத்து



முன்னுரை

கோவலனும் கண்ணகியும் வாழ்ந்து மறைந்த காலத்தில் சேரநாட்டை ஆண்ட பெருவீரன் செங்குட்டுவன் என்பவன். அவன் தன் நாட்டுள் வந்து விண்ணுலகடைந்த கண்ணகிக்குக் கோயில் கட்ட விரும்பி, இமயத்திலிருந்து கல்லைக்கொணர வடநாடு சென்றான்; சென்று, தன்னை எதிர்த்த ஆரிய அரசரை வென்று, பத்தினியின் உருவத்தைச் செதுக்கத்தக்க கல்லை இமயமலையிலிருந்து கொண்டுவந்தான். அவன் வஞ்சிமாநகர் மீண்ட அன்று அவனது களைப்பைப்போக்க கூத்தச் சாக்கையன் நடனமாட வரவழைக்கப்பட்டான்.

சாக்கையன் ஆடிய கூத்து

வந்த சாக்கையன் சிவபெருமான் ஆடிய கொட்டிச் சேதம் என்னும் கூத்தை ஆடிக்காட்டினான் . சிவபெருமான் உமாதேவியை இடப்பாகத்தில் தாங்கியபடி ஆடிய கூத்து இது. சிவபெருமான் மாதொருபாதியன் ஆதலால், அவனது உடலில் வலப்பாதி ஆணுருவாகவும், இடப்பாதி பெண்ணுருவாகவும் அமைந்துள்ளன. அவ்வமைப்பு நிலையில் சிவபெருமான் ஆடிய கூத்தையே சாக்கையன் ஆடிக்காட்டினான். அவன் ஆடியபொழுது காலில் அணிந்திருந்த சிலம்பு ஒசையிட்டது; கையிலிருந்த பறை ஆர்த்தது; அவனுடைய கண்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/69&oldid=1359154" இலிருந்து மீள்விக்கப்பட்டது