பக்கம்:தமிழ் இனம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாக்கைக் கூத்து

73

சிவனுடைய மனக்குறிப்பை உணர்த்தின. அவனுடைய சிவந்த சடை, கூத்தின் அசைவால் நாற்றிசைகளிலும் அசைந்தாடியது. ஆனால் இடப்பாகமிருந்த உமையின் பாடகம் என்ற காலணி அசையவில்லை; சூடகம் துளங்கவில்லை; மேகலை ஒலிக்கவில்லை; மென்மார்பு அசையவில்லை. அவளது குழை என்னும் காதணி ஆடவில்லை; நீண்ட கூந்தலும் அவிழவில்லை. இங்ஙனம் உமையவளை இடப்பாகத்தில் ஏந்தி, திரிபுரம் எரித்த பின்னர் முக்கண்ணன் ஆடிய கொட்டிச்சேதம் என்னும் கூத்தை மேற் சொல்லப்பட்ட சாக்கையன் ஆடிக் காட்டினான்.

“திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும்
பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவுஞ்
செங்க ணுயிரந் திருக்குறிப் பருளவுஞ்
செஞ்சடை சென்று திசைமுக மலம்பவும்
பாடகம் பதையாது சூடகந் துளங்காது
மேகலை யொலியாது மென்முலை யசையாது
வார்குழை யாடாது ::மணிக்குழ லவிழா
துமையவ ளொருதிற கை, வோங்கிய
இமையவ னடிய கொட்டிச் சேதம்”

(சிலம்பு, நடுகற் காதை, வரி-67-75)

பறையூர்ச் சாக்கையன்

இங்ஙனம் இக்கூத்தை ஆடியவன் பறையூரைச் சேர்ந்தவன் என்றும், அவ்வூர் நான்மறையோரைக் கொண்டதென்றும் சிலப்பதிகாரம் செப்புகிறது.

பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க்
கூத்தச் சாக்கையன் ‘ (௸ வரி. 76-77)

செங்குட்டுவன் வஞ்சிமாநகர் வந்தவுடன் சொல்லியனுப்ப, அன்றே சாக்கையன் வந்தாடி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/70&oldid=1359166" இலிருந்து மீள்விக்கப்பட்டது