பக்கம்:தமிழ் இனம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

தமிழ் இனம்

னான் ஆதலின், பறையூர் என்பது வஞ்சிமுதூர்க்கு அண்மையில் இருக்க வேண்டும். இதனை ஆராய்ந்து பார்த்த வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார், “இப்பறையூர் இக்காலப் ‘பரூர்’ என்பது. இவ்வூரில் நடிப்புத் தொழிலையுடைய பிராமண சமூகம் ஒன்று நிலை பெற்று வாழ்கின்றது,” என்று கூறியுள்ளார்.[1]

மலையாளத்தில் சாக்கையர்

சாக்கையர் என்னும் பெயருடன் கூத்தாடும் பிராமண வகுப்பினர் நம் தமிழகத்தில் இல்லை ; ஆயின், சேரநாடான மலையாளத்தில் இன்றும் இருந்து வருகின்றனர். மலையாளத்தில் கோவிற் பணி செய்பவர்கள் அம்பலவாசிகள்’ எனப்படுவர். நம்பியாசான், புஷ்பகன் (பூப்பள்ளி), சாக்கியர், பிராமணி அல்லது தெய்வம்படி, அடிகள், நம்பியார், பிஷாரடி, வாரியர், நாட்டுப்பட்டன், தீயாடுன்னி, குருக்கள், பொதுவாள் என்னும் பிரிவினர் ‘அம்பலவாசிகள்’ என்னும் பொதுப் பெயரால் குறிக்கப்படுகின்றனர். அம்பலம் என்பது கோவில்; வாசி என்பதற்கு வாழ்பவர் என்பது பொருள். எனவே, அம்பலவாசிகள் என்பதற்குக் “கோவிலால் வாழ்பவர்” என்பது பொருளாகும். இவருள் அடிகள், சாக்கியர், நம்பியார், புஷ்பகன், தீயாட்டு நம்பியார் என்பவர் பூணூல் அணிந்தவர் ; பிறர் பூணுால் அணியாதவர். உயர்வகுப்புப் பெண்ணுக்கும் தாழ்ந்த வகுப்பு ஆணுக்கும் பிறந்தவர் பிரதிலோமர் எனப்படுவர். தாழ்ந்த வகுப்புப் பெண்


  1. சேரன் வஞ்சி, பக். 62.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/71&oldid=1507224" இலிருந்து மீள்விக்கப்பட்டது