பக்கம்:தமிழ் இனம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



76

தமிழ் இனம்

சம்பந்தம்' முறையில் வாழ்க்கை நடத்தலாம். அவர்களுக்கு 'இல்லோத்தம்மமார்' என்பது பெயர். அவர்தம் அணிவகைகள் நம்பூதிரிப் பெண்கள் அணிவன போன்றனவே. சாக்கிய ஆடவர் நம்பியார் பெண்களை மணக்கலாம். சாக்கையருள் புரோகிதர் உண்டு. ஆயின், இறப்பு நிகழ்ச்சியிலும் பிறப்பு நிகழ்ச்சியிலும் பார்ப்பனப் புரோகிதன் இடம்பெறுவான். அவர்கள் பதினொருநாள் தீட்டுடையர். காயத்திரி மந்திரம் பத்துமுறை ஒத அவர்களுக்கு உரிமை உண்டு.

சாக்கையர் கூத்து

புராண கதைகளைக் கூறுதலும் நடித்தலுமே இவர்தம் தொழில். ஒரு கதையைக் கூறும்பொழுது இச்சாக்கையர் எண்ணற்ற உபகதைகளை விளக்கத்திற்காக இடையிடையே செருகுவர். கேட்போர் தம்மை மறந்து இருக்கத்தகும் நிலையில் கதைகளைக் கூறுவதிலும் நகைச்சுவை மிகுவிப்பதிலும் நடிப்பதிலும் இச்சாக்கையர் இணையற்றவர். வட திருவாங்கூரில் உள்ள ஒவ்வொரு சிறப்புடைக் கோவிலில் நடைபெறும் விழா நிகழ்ச்சிகளில் சாக்கையர் கூத்துச் சிறப்பிடம் பெற்றிருக்கும். அவர் கூத்தாடுமிடம் ஒரு தனிக் கட்டடமாகும். அதற்குக் கூத்தம்பலம்’ என்பது பெயர். அவ்வம்பலத்தில் சாக்கையன் முக்காலிமீது அமர்வான். அவன் தலையில் விநோதமான சரிகைத் தலைப்பாகை காட்சியளிக்கும். ஓரத்தில் பல நிறங்கள் அமைந்த-அகலத்திற் குறுகிய-நீண்ட ஆடையை இடுப்பைச் சுற்றிலும் அணிந்திருப்பான். அவ்வாடை கணக்கற்ற மடிப்புக்களை உடையதாகவும் கண்கவரத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/73&oldid=1507226" இலிருந்து மீள்விக்கப்பட்டது