பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

தமிழ் இலக்கியக் கதைகள்

என்பதே அந்தப் பாடல். ‘நான் பசியோடு அன்னத்தை எதிர்பார்த்து இலையில் அமர்ந்தேன். ஆனால் நீயோ ‘பொன்னோடு (இலக்குமி வடிவத்தோடு) கூடிய பொன் ஆபரணமாகிய மோதிரத்தை இலையிலே போட்டு விட்டாய்! அன்னம் கேட்ட வாய்க்குப் பொன்னாபரணத்தையே அமுதமாக அளித்த பெருமையை என்னென்பது?’ என்ற கருத்துக்கள் யாவும் தமிழ்வானர் பாடவில் தொனிக்கின்றன. இதற்கு மேலும் ‘புலவர் தம்மை அபசாரமாக எண்ணவில்லை’ என்பதை அறிந்து கொள்ள வள்ளலுக்கு வேறுசான்று எதுவும் தேவையில்லையே!

41. என் பெருமை

தம்முடைய சொந்த வாழ்க்கையின் துன்பங்களைப் பிறருக்கு எடுத்துரைத்து உதவி கேட்பது எளிமையான செயல் அன்று. கொடுத்து உதவுகின்ற குண இயல்பைப் பொறுத்தோ வள்ளன்மையைப் பொறுத்தோ ஏற்படுவதில்லை இந்தச் செயலருமை.

கேட்கின்றவனின் உள்ளத்தைப் பொறுத்து அது பண்பட்டிருக்கும் அளவைப் பொறுத்துத்தான் ஏற்படுகிறது. கற்றுத் தேர்ந்த கவிபாட வல்ல கவிஞர்கள் உள்ளத்தை இந்த நிலையிலே வைத்து நினைக்கவும் முடிவதில்லை. பிறருக்குப் பணிய விரும்பாதது கவியுள்ளம். தன் சொந்த உணர்ச்சிகளையும், இன்ப துன்பங்களையும் கூடத் தன்னோடு அமைத்துக் கொள்வது. அது பொறுத்துக் கொள்ள முடியாத நிலைமையில் மட்டும் வெளியிடத் தகுதி வாய்ந்தவர்களிடம் குறிப்பாக வெளியிடுமே அன்றித் தன் துயரத்தை விவரிக்க அது துணிவதில்லை. பிறர் கைபடாத மலரைப் போன்றது கவி நெஞ்சம். அது தானாக மலரும். அதை மலர்த்த முடியாது. மலர்ந்த பிறகும் ‘எடுப்பார் கைப்பிள்ளை’ ஆக அது வருவதில்லை.

குடும்ப வாழ்க்கையின் கொடுந் தொல்லைகள் அனுபவத்திற்கு வருவதன் முன் கவி சொக்கநாதருடைய உள்ளமும்