பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/171

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா.பார்த்தசாரதி
169
 

இராமாயணக் காவியத்தில் தசரதனுக்கு நேர்ந்த தாங்க முடியாததொரு துன்பத்தைக் கம்பர் தம் கவிதைகளால் உணர்ச்சி துடிக்க எழுதியிருந்தார். மகனைப் பிரியும்போது ஒரு தந்தைக்கு உண்டாகும் துன்ப உணர்ச்சியை வேறு எந்தக் கவியும் எழுத முடியாது என்பது போலக் கம்பர் எழுதிப் பெயர் பெற்று விட்டார் என்பது உலகறிந்த உண்மை.

கைகேயியின் கொடுமையாலே இராமன் பதினான்கு ஆண்டுகள் காடு செல்ல நேர்ந்ததும், அது பொறாமல் தசரதன் உயிர் நீத்ததும் ஆகிய நிகழ்ச்சிகள் இராமாயணக் காவியத்தில் முக்கியமான கட்டங்கள் அல்லவா?

அதே மாதிரி ஒரு சம்பவம் கம்பருடைய சொந்த வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்டது. தசரதனுக்கு ஏற்பட்டதை விடக் கொடுமையான முறையில் கம்பருக்கு அந்தத் துன்பம் ஏற்பட்டது. ஆனால் தசரதன் செய்தது போல் கம்பரால் அந்தத் துக்கத்தில் தோய்ந்து மனம் தவிக்க முடியவில்லை. 'அப்படி முடியவில்லையே’ என்பதற்காகக் கம்பரே வருந்துகிறார். அந்த வருத்தத்தை எதிரொலிப்பது போல் கம்பர் பாடிய ஒரு பாடலைத்தான் இங்கே காணப்போகிறோம்.

சோழ மன்னன் மகளைக் காதலித்த குற்றத்துக்காகக் கம்பருடைய மகன் அம்பிகாபதி தண்டனை அடைந்து இறந்து போகிறான். ஒரே மகனை இழந்த பாசத்தில் நெஞ்சு துடித்து வேகின்றார் கம்பர்.

'கண்ணுக்குக் கண்ணான மகனை இழந்த பின்னும் நான் துடிதுடித்துச் சாகாமல் உயிரோடு நின்று கொண்டிருக்கிறேனே! எனக்கு எத்தனை கல்லான நெஞ்சம்? நாட்டிலிருந்த மகன் காட்டுக்குப் போனதற்கே பொறுக்காமல் தசரதன் இறந்தான் என்று என்னுடைய இராமாயணத்தில் எழுதினேனே!. அப்படி எழுதிய நானா என் மகனை இறப்புக்குக் கொடுத்த பின்னும் இப்படி உயிர் தரித்து நின்று கொண்டிருக்கிறேன்? எனக்கு என்ன நெஞ்சுரப்பு?’ என்று மனம் அவரைக் கசக்கிப் பிழிந்தது. 'தசரதனுக்கு இருந்த மகப் பாசம் தமக்கு இல்லாமற் போய்