பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

43

வெந்த தயம் = ஒரு மருந்துச் சரக்கு, உடலின் பாரம்.

சீரகம் = மோட்சம், காயம் = உடல்

என்று பாடிக்கொண்டே உதடுகளில் விஷமப் புன்னகையை நெளியவிட்டார் காளமேகம்.

“வெம்மையான உடல் வறண்டு போனால் வெந்து போன அயச் செந்துரமென்னும் மருந்தினாலும் அந்த வறட்சி தீராது. வீண் பாரமான இந்த உடற்சரக்கை யார் சுமப்பார்? சீர்மையான அகமாகிய மோட்சத்தை அளித்தால் இந்தப் பெரிய உடலைத் தேடமாட்டேன்! ஏரகத்து முருகனே!” என்று வெளிப்படையாகவும், “வெங்காயம் முதலிய சரக்குகளைக் கட்டி அழுது சுமப்பதால் பயனென்ன? தலைவலிக்குச் சீரகம் தந்திருந்தால் பெருங்காயத்தைத் திருடியிருக்கமாட்டேன்! ஏரகத்து வயிரவநாதன் செட்டியாரே!” என்று உள்ளே வேறு ஒரு பொருளும் பொதிந்துள்ளது.

17. கையாலாகாதவர்கள்

லையையும் கவிதையையும் உரிய முறையில் கெளரவித்துப் பாராட்டி இரசிக்காமல், வெறும் வாய்ப்பந்தலினாலேயே இரசிப்பதுபோலப் பாவனை செய்யும் கையாலாகாதவர்கள் எப்போதும் இருக்கத்தான் இருக்கிறார்கள்.

இராமானுஜப் பாவலர் காலத்திலும் அத்தகையவர்கள் குறைவின்றி நிறைந்திருந்தார்கள் போலும். ‘கண்னெடுத்துப் பாராமல் விலகி இருந்துவிட்டாலும் பரவாயில்லை. கண்டு சுவைத்து மகிழ்வது போல் நடிக்கும் போலி நேயர்கள் தாம் கவிஞர்களின் முதல் எதிரி, சத்துரு எல்லாம். ‘அழகு! அழகு!’ என்று வாய்கிழிய வளர்த்து வானளாவப் புகழ்வது. வயிறு காயும்போது வடித்த கஞ்சிகூடத் தராமல் கதவை அடைத்து விடுவது; இவர்களா நேயர்கள்? இவர்களா இரசிகர்கள்? ‘ரசனை’